இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கும் ஆர்ச்சர்

Updated: 03 May 2019 14:20 IST

க்றிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி மற்றும் மார்க் வுட் ஆகியோர் ஆர்ச்சரின் சேர்க்கை அணியின் உத்வேகத்தை குறைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Jofra Archer Set To Make England Debut
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி அசத்தி வருகிறார் ஆர்ச்சர். © BCCI/IPL

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். 24 வயதான இவர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளது பல வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. க்றிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி மற்றும் மார்க் வுட் ஆகியோர் இவரது சேர்க்கை அணியின் உத்வேகத்தை குறைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆர்ச்சர் 15 பேர் கொண்ட உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எனினும், அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஜொலிக்கும் ஆர்வத்தில் உள்ளார் ஆர்ச்சர். உலகக் கோப்பை அணி மே 23 இறுதியாகும் என்பதால் ஆர்ச்சருக்கு அணியில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறப்படுகிறது. 

மிடில்செக்ஸ் பேட்ஸ்மேன் தாவித் மாலன், சர்ரே கீப்பர் பென் போக்ஸ் ஆகியோர் சாம்பில்லிங்ஸ்க்கு பதில் இடம்பெற்றுள்ளனர், அவர்களுக்கும் இதுதான் அறிமுக தொடராக இருக்கும். 

ஆர்ச்சர் சேர்ப்பு குறித்து கூறியுள்ள கேப்டன் மார்கன் ''அவர் அபாரமான திறன் கொண்டவர். அவருக்கு எதிராக நான் ஆடியுள்ளேன். அவர் திறமையான வீரர். அவரது சேர்க்கை அணிக்கு வலு சேர்க்கும்'' என்றார். 

மேலும், "அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அறிமுகப்போட்டி என்பது கொண்டாடப்பட வேண்டியது. அவருக்கான அங்கீகாரம் அணியில் கட்டாயம் இருக்கும்" என்றார்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி அசத்தி வருகிறார் ஆர்ச்சர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆர்ச்சருக்கு இடம்...இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் 3 மாற்றம்!
ஆர்ச்சருக்கு இடம்...இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் 3 மாற்றம்!
இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கும் ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கும் ஆர்ச்சர்
கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates
கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates
பவர்ப்ளேயில் தல தோனி பேட்டிங்கிற்கு பயந்த ஸ்டெம்புகள்
பவர்ப்ளேயில் தல தோனி பேட்டிங்கிற்கு பயந்த ஸ்டெம்புகள்
இங்கிலாந்தின் உலகக் கோப்பை அணிக்கு இந்த வீரர் பலம் சேர்ப்பார்: நாஸர் ஹுசைன்
இங்கிலாந்தின் உலகக் கோப்பை அணிக்கு இந்த வீரர் பலம் சேர்ப்பார்: நாஸர் ஹுசைன்
Advertisement