ஆர்ச்சருக்கு இடம்...இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் 3 மாற்றம்!

Updated: 21 May 2019 22:47 IST

உலகக் கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருந்தது. மே 30 உலகக் கோப்பை போட்டிகள் துவங்க உள்ள நிலையில் 3 மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்துள்ளது.

Jofra Archer Included As England Announce 15-Member World Cup Team
அக்டோபரில் இலங்கைக்கு எதிரான தொடருக்கு பின் அணியில் இடம்பிடிக்காத டாவ்ஸன் அணிக்கு திரும்பியுள்ளார். © Twitter

உலகக் கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருந்தது. மே 30 உலகக் கோப்பை போட்டிகள் துவங்க உள்ள நிலையில் 3 மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்துள்ளது.  ஜோ டேன்லி மற்றுக் டேவிட் வில்லி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆர்ச்சருக்கு இடமில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. ஆர்ச்சர், லியம் டாவ்ஸன் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோரை தற்போது மாற்றியுள்ளது.

இங்கிலாந்தின் பாகிஸ்தானுடனான தொடரில் அறிமுகமான ஆர்ச்சர் சிறப்பாக ஆடினார். இங்கிலாந்து 4-0 என்ற தொடரை வென்றது.

3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளார். ஆர்ச்சர் 46 ஒருநாள் போட்டிகளில் ஆடி அனுபவமுள்ள டேவிட் வில்லிக்கு மாற்றாக இவர் அணியில் இடம்பிடித்துள்ளார். 

அக்டோபரில் இலங்கைக்கு எதிரான தொடருக்கு பின் அணியில் இடம்பிடிக்காத டாவ்ஸன் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் கவுண்டி போட்டிகளில் 18 விக்கெட்டிகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் இடம்பிடித்துள்ளார்.

சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது இங்கிலாந்து. முதல் போட்டியில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

இங்கிலாந்து அணி விவரம்:

மோர்கன், மொயின் அலி, ஆர்ச்சர், பாரிஸ்டோ, பட்லர், டாம் குரான், லுயம் டாவ்ஸன், ப்ளன்கெட், ரஷ்த்,ரூட், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், வோக்ஸ், வுட்.
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஷஸ் 2019: ஜோஃப்ரா ஆர்ச்சரை சீண்டிய ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றம்!
ஆஷஸ் 2019: ஜோஃப்ரா ஆர்ச்சரை சீண்டிய ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றம்!
ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை - ஸ்மித்
ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை - ஸ்மித்
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு 'குறும்பான பதிவு' என பதிலளித்த ஆர்ச்சர்!
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
Advertisement