ஸ்டம்புகளை தெறிக்கவிடும் பும்ராவின் ‘யார்க்கர்’ ரகசியம் என்ன- அவரே விளக்குகிறார்!

Updated: 03 July 2019 15:32 IST

இந்திய அணி, நேற்று வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது பும்ராவின், துல்லியமான யார்க்கர் பந்துகள்தான்.

India vs Bangladesh: Jasprit Bumrah Reveals Secret Behind His Consistent Yorkers
ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பும்ராவின் ‘யார்க்கர்கள்’தான் இந்த முறை உலகக் கோப்பைத் தொடரில் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை பதம் பார்த்து வருகிறது.  © AFP

ஜஸ்ப்ரீத் பும்ரா. உலகின் நம்பர் ஒன் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பவுலர். இந்திய அணி, நேற்று வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது பும்ராவின், துல்லியமான யார்க்கர் பந்துகள்தான். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பும்ராவின் ‘யார்க்கர்கள்'தான் இந்த முறை உலகக் கோப்பைத் தொடரில் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை பதம் பார்த்து வருகிறது. 

குறிப்பாக நேற்றைய போட்டியில் ஒரு கட்டத்தில் வங்கதேசம், இந்திய அணியை வீழ்த்தும் நிலையில் இருந்தது. அந்த அணிக்குக் கடைசி 3 ஓவர்களின் 36 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. கையில் 2 விக்கெட்டுகள் இருந்தன. ஒரு பக்கம் முகமது சைஃபுதீன், அரைசதம் அடித்து கூலாக இருந்தார். 48வது ஓவரை பும்ராவிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. 

ஓவரின் 5வது பந்தில் 10வது பேட்ஸ்மேனான ருபெல் ஹொசேனுக்கு மின்னல் வேகத்தில் ‘மிடில் ஸ்டம்ப் யார்க்கர்'. தெறித்தது ஸ்டம்ப். வங்கதேச அணியின் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கினார் முஸ்தஃபிசூர் ரஹ்மான். அவருக்கும் அதே பந்து. அதே ரிசல்ட். பும்ராவுக்கு அந்த ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகள். போட்டியில் மொத்தமாக 4 விக்கெட்டுகள். இந்தியா, 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்படி தொடர்ந்து மரண மாஸ் யார்க்கர்கள் போடுவதின் ரகசியம் என்ன என்று பும்ராவிடம் கேட்டால், “பயிற்சியின் போது, திரும்ப திரும்ப அதைச் செய்து பார்ப்பேன். அதிகமாக யார்க்கர் பந்து போட்டு பழகினால், அதில் ஓரளவுக்கு நிபுணத்துவம் பெற முடியும். அவ்வளவுதான்.

யார்க்கர் என்பதும் ஒருவகை பந்து வீச்சுதான். தொடர்ந்து செய்து பார்க்கும்போது, அதுவும் துல்லியமாக வரும்” என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்கிறார். 


 

Comments
ஹைலைட்ஸ்
  • நேற்று வங்கதேசத்தை இந்தியா, 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • வங்கதேச போட்டியில் ரோகித் ஷர்மா, தொடரின் தனது 4வது சதத்தை அடித்தார்
  • பும்ரா, 48வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!
"ஃபிட்னஸ் சிலை" - கோலி மற்றும் பும்ராவை புகழ்ந்த யுவராஜ் சிங்!
இரண்டு நாட்கள் முன்பே ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய பும்ரா?
இரண்டு நாட்கள் முன்பே ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய பும்ரா?
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
"போட்டியின் வெற்றியாளர்" மலிங்காவுக்கு ரோஹித் ஷர்மா செய்த ட்விட்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அனைத்து விதமான போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்: அனைத்து விதமான போட்டிகளுக்கு கோலி தான் கேப்டன்!
Advertisement