விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!

Updated: 12 July 2019 13:07 IST

ஐசிசி விதிகளை மீறிய காரணத்துக்காக, ஜேசன் ராய்க்கு அபராதம் வித்திக்கப்பட்டது.

Jason Roy Fined For Breaching Code Of Conduct, Avoids Ban For World Cup Final
ஜேசன் ராய்க்கு ஆட்ட சம்பளத்தில் இருந்து 30 சதவிகிதம் பணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. © AFP

இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐசிசியின் முதல் நிலை விதிகளை மீறிய காரணத்துக்காக அபராதம்  விதிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து அணி உலகக் கோப்பை இறுதுச்சுற்றுக்கு 27 வருடங்கள் கழித்து உள்ளே நுழைந்துள்ளது. ஜேசன் ராய் எடுத்த 85 ரன்கள் இலக்க எட்ட பெரும் உதவியாக இருந்தது. இருப்பினும், 19வது ஓவரின் போது, அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார். ஆனால், அதை ஏற்காமல் அம்பயர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டு, ஐசிசி விதிகளை மீற்யுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு ரிவ்யூ மீதமில்லாததால் ரிவ்யூ கேட்க முடியாமல் போனது. இருப்பினும், தர்மசேனா குழப்பமாக ரிவ்யூவுக்கு வலியுறித்தினார். ஆனால் ஆஸ்திரேலிய அதிகாரிகள் அதை தவறு என சுட்டி காட்டினர்.

இந்த முடிவுக்கு ராய் மிகவும் கோபமடைந்தார், களத்தை விட்டு வெளியேறவும் மறுத்தார். ஆனால், நடுவர் மாரைஸ் அவரை வெளியேற்ற வேண்டிருந்தது. 

உலகக் கோப்பை இறுதிக்கு செல்லும் நேரத்தில் இதுபோன்ற முடிவுகள் தவறானது என கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கண்டனத்தை தெரிவித்தார்கள்.

பின்னர், ஐசிசி விதிகளை மீறிய காரணத்துக்காக, அவருக்கு அபராதம் வித்திக்கப்பட்டது.

"ஜேசன் ராய்க்கு ஆட்ட சம்பளத்தில் இருந்து 30 சதவிகிதம் பணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடைமுறை பதிவில் இரண்டு புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆட்டத்தில் இருந்து நீக்கம் இல்லை" என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுடன் மோதி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணி இறுதுச் சுற்றில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

ஜேசன் ராய் 85 ரன்கள் குவித்து 224 இலக்கை எளிதாக எட்ட செய்தார். ஆட்ட முடிவில் 107 பந்துகள் மீதமிருந்தன.

இங்கிலாந்து தொடக்க வீரர்களான ராய் மற்றும் பேரிஸ்டோ(34) முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் குவித்தனர்.

இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றில், அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • ராய்க்கு ஆட்ட சம்பளத்திலிருந்து 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
  • ஒழுங்கு நடைமுறை பதிவில் அவருக்கு இரண்டு புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன
  • குமார் தர்மசேனா அவுட் அறிவித்த பிறகும் ஜேசன் ராய் வெளியேறவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் : உலக சாம்பியன் இங்கிலாந்தை 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து அணி!!
கிரிக்கெட் : உலக சாம்பியன் இங்கிலாந்தை 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து அணி!!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு... வருத்தத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு... வருத்தத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்!
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
"பக்கா மாஸ்"- ரவீந்திர ஜடேஜாவின்
"பக்கா மாஸ்"- ரவீந்திர ஜடேஜாவின் 'வாவ்' ஃபீல்டிங்...!
Advertisement