உலகக் கோப்பை 2019: ’வாழ்வா, சாவா’ போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வங்கதேசம்! #Preview

Updated: 02 July 2019 09:52 IST

இந்தியாவின் ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கர், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மாயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Bangladesh vs India: Bangladesh Face India In A Do-Or-Die Clash
வங்கதேசத்தைப் பொறுத்தவரை, அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், நல்ல ஃபார்மில் இருக்கிறார். © AFP

2019 உலகக் கோப்பையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட இந்தியா, தனது முதல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்று எட்க்பாஸ்டனில் வங்கதேசத்தை எதிர்த்துக் களம் காண்கிறது இந்தியா. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதி இடத்தை இந்தியா உறுதி செய்யப் பார்க்கும். வங்கதேச அணி, இந்த முறை உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வருவதால், இந்தியாவை வீழ்த்தப் பார்க்கும். வங்கதேசம், அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெற மீதியிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது வங்கதேசம். புள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் நிலை கொண்டுள்ளது வங்கதேசம். இந்தியா, 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

வங்கதேசத்தைப் பொறுத்தவரை, அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரோகித் ஷர்மா, தொடரில் 3 சதங்கள் அடித்து, மரண மாஸ் ஃபார்மில் உள்ளார். இரு அணிகளும் அவர்களின் இன்-ஃபார்ம் வீரர்களிடமிருந்து, அதகளப்படுத்தும் ஆட்டத்தை எதிர்பார்க்கும். 

இந்தியாவின் ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கர், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மாயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டது. எனவே, அவர்களில் ஒருவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் சேர்க்கப்படலாம். 

கடைசி போட்டியில் இந்தியா தோல்வி கண்டிள்ளது. ஆயினும், இந்தப் போட்டியில் இந்தியாதான் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் வங்கதேசத்தின் ஆட்டம் கணிக்க முடியாத வகையில் உள்ளது. அது குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். 

அணிகள்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா, சாஹல், தோனி, ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், தினேக் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல், முகமது ஷமி, ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ்

வங்கதேசம்: மஷரஃபே மோர்டசா (கேப்டன்), அபு ஜேயத், லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, மேதி ஹாசன், முகமது மிதுன், முகமது சைஃபுதீன், மொசாடக் ஹொசேன், முஷ்ஃபிக்கிர் ரஹீம், முஸ்த்தஃபிசுர் ரஹ்மான், ரூபெல் ஹொசென், சபீர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், சவுமியா சர்கார், தமீம் இக்பால்

Comments
ஹைலைட்ஸ்
  • வங்கதேசம், இனி வரும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டும்
  • இந்தியா, இரு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும்
  • இந்தியா, தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
ரசிகையை காயப்படுத்திய சிக்ஸர்! நேரில் அழைத்து தொப்பியை பரிசாக அளித்த ரோஹித் சர்மா!!
ரசிகையை காயப்படுத்திய சிக்ஸர்! நேரில் அழைத்து தொப்பியை பரிசாக அளித்த ரோஹித் சர்மா!!
ஸ்டம்புகளை தெறிக்கவிடும் பும்ராவின் ‘யார்க்கர்’ ரகசியம் என்ன- அவரே விளக்குகிறார்!
ஸ்டம்புகளை தெறிக்கவிடும் பும்ராவின் ‘யார்க்கர்’ ரகசியம் என்ன- அவரே விளக்குகிறார்!
இந்திய- வங்கதேச போட்டியில் பங்கேற்ற 87 வயது ரசிகை- போட்டி முடிந்தவுடன் ஆசி பெற்ற கோலி! #Video
இந்திய- வங்கதேச போட்டியில் பங்கேற்ற 87 வயது ரசிகை- போட்டி முடிந்தவுடன் ஆசி பெற்ற கோலி! #Video
“ரோகித்தான் பெஸ்ட்..!”- சொல்வது கிங் கோலி
“ரோகித்தான் பெஸ்ட்..!”- சொல்வது கிங் கோலி
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
Advertisement