"நியூசிலாந்து அணியில் சேர தோனிக்கு தகுதியில்லை" - கேன் வில்லியம்சன்

Updated: 11 July 2019 17:42 IST

இதுபோன்ற சூழலில் அனுபவம் மிகவும் முக்கியம். கடந்த இரண்டு நாட்களில் தோனியின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

MS Dhoni May Be Considered For New Zealand Squad If He Changes Nationality, Says Kane Williamson
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 7வது இடத்தில் ஆடிய தோனி, அரைசதம் அடித்தார். © AFP

2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்தி வெற்ற பெற செய்த தோனிக்கு, 2019 ஆண்டு மெதுவாக பேட் செய்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்தியாவுக்கு மிக முக்கியமான போட்டியான நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கடைசி வரை இலக்கை நோக்கி ஆடி வந்தாலும், மெதுவாக பேட் செய்கிறார் என்ற விமர்சனமே எழுந்துள்ளது. தோனியை தன்னுடைய அணியில் இணைப்பாரா என்ற கேள்விக்கு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், "அவர் நியூசிலாந்து அணியில் இணைய தகுதியற்றவர்" என்றார்.

"இதுபோன்ற சூழலில் அனுபவம் மிகவும் முக்கியம். கடந்த இரண்டு நாட்களில் அவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. மேலும், இந்தத் தொடர் முழுவதும் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது" என்றார் வில்லியன்சன்.

"அவர் ஒரு உலக தரம் வாய்ந்த வீரர். ஆனால் அவர் தேசிய அடையாளத்தை மாற்ற போகிறாரா? ஒருவேளை மாற்றினால், நியூசிலாந்து அணியில் அவரை சேர்க்கலாம்" என்று நக்கலாக பதிலளித்தார்.

இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு சென்றிருப்பது, இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரசிகர்களின் மனநிலை தனக்கு நன்றாக புரிவதாக கூறிய வில்லியம்சன், "எங்கள் மீது அவர்கள் மிகவும் கோவமாக இல்லை என்று நம்புகிறேன்" என்றார்.

கிரிக்கெட் மீது இந்திய ரசிகர்களின் ஆர்வத்தை பாராட்டிய வில்லியம்சன், நியூசிலாந்து அணி முதல் உலகக் கோப்பை வெல்ல 1.5 மில்லியன் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுகொண்டுள்ளார்.

"1.5 மில்லியன் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று சாதுவாக கேட்டுக்கொண்டார்.

வில்லியம்சனின் பதில் தெளிவாக இல்லையென்றாலும் அவரின் வேண்டுகோல் மனம் உருக செய்யும் விதமாகவே அமைந்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் எடுத்தார் தோனி
  • தோனி க்ரீஸில் இருந்தவரை இந்திய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது
  • தோனி வெளியேறிய பிறகு இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement