"பக்கா மாஸ்"- ரவீந்திர ஜடேஜாவின் 'வாவ்' ஃபீல்டிங்...!

Updated: 01 July 2019 12:40 IST

ஜடேஜாவின் இந்த அமர்க்களாமான கேட்சை சமூக வலைதளங்களில் மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

India vs England: Ravindra Jadeja Takes Wonder Catch To Dismiss Jason Roy
Ravindra Jadeja: இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. © Twitter

உலகக்கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் மற்றும் ஜானி பேரிஸ்டோ ஆகியோர் அதிரடியான துவக்கத்தை தந்தனர். இந்தியாவிற்காக கே எல் ராகுலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஜேசன் ராய் அடித்த பந்தை லாங் ஆன் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா அட்டகாசமாக பிடித்து ராயை அவுட் செய்தார். முதல் விக்கெட்டுக்கு ராய் – பேரிஸ்டோ இணை 160 ரன்கள் குவித்தது.

ஜடேஜாவின் இந்த அமர்க்களாமான கேட்சை சமூக வலைதளங்களில் மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஜானி பேரிஸ்டோ சதம் அடித்து அசத்தினார். ஜேசன்ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தனர். இந்தியாவிற்காக முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ராய் – பேரிஸ்டோ இணை 160 ரன்கள் குவித்தது.
  • கே எல் ராகுலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா பீல்டிங் செய்தார்
  • லாங் ஆன் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார் ஜடேஜா
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி தரவரிசையில் கோலி நம்பர் 1, பும்ரா முதலிடத்தை தவறவிட்டார்!
ஐசிசி தரவரிசையில் கோலி நம்பர் 1, பும்ரா முதலிடத்தை தவறவிட்டார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
2வது டி20 வெற்றிக்கு பிறகு விராட் கோலி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
"ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது" - சவுரவ் கங்குலி
"ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது" - சவுரவ் கங்குலி
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
Advertisement