நிறைவுற்ற போட்டிகள்   
Match 40, எட்க்பாஸ்டன், பிர்மிங்காம்., Jul 02, 2019
பங்களாதேஷ் பங்களாதேஷ்
286 (48.0/50)
இந்தியா இந்தியா
314/9 (50.0/50)
இந்தியா அணி, 28 ரன்னில் பங்களாதேஷ் வை வென்றது

World Cup : 28 ரன் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வென்றது இந்தியா!!

Updated: 02 July 2019 23:10 IST

India vs Bangladesh Live Score: இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது வங்கதேசம். புள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் நிலை கொண்டுள்ளது வங்கதேசம்.

Bangladesh vs India Live Score, IND vs BAN Live Cricket Score, World Cup 2019: India Face Bangladesh Test, Eye Semis Berth
இந்தியா, 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது © AFP

2019 உலகக் கோப்பையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட இந்தியா, தனது முதல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்று எட்க்பாஸ்டனில் வங்கதேசத்தை எதிர்த்துக் களம் காண்கிறது இந்தியா. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதி இடத்தை இந்தியா உறுதி செய்யப் பார்க்கும். வங்கதேச அணி, இந்த முறை உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வருவதால், இந்தியாவை வீழ்த்தப் பார்க்கும். வங்கதேசம், அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெற மீதியிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது வங்கதேசம். புள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்தில் நிலை கொண்டுள்ளது வங்கதேசம். இந்தியா, 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசத்தைப் பொறுத்தவரை, அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரோகித் ஷர்மா, தொடரில் 3 சதங்கள் அடித்து, மரண மாஸ் ஃபார்மில் உள்ளார். இரு அணிகளும் அவர்களின் இன்-ஃபார்ம் வீரர்களிடமிருந்து, அதகளப்படுத்தும் ஆட்டத்தை எதிர்பார்க்கும்.

சென்ற போட்டியில் விளையாடிய கேதார் ஜாதவ் மற்றும் குல்தீப் யாதவுக்கு பதில், தினேஷ் கார்த்திக் மற்றும் புவ்னேஷ்வர் குமார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விளையாடும் 11 பேர்:

இந்தியா 11: ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, தோனி, புவ்னேஷ்வர் குமார், முகமது ஷமி, சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா

வங்கதேச 11: மஷரஃபே மோர்டசா (கேப்டன்), லிட்டன் தாஸ், முகமது சைஃபுதீன், மொசாடக் ஹொசேன், முஷ்ஃபிக்கிர் ரஹீம், முஸ்த்தஃபிசுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், சவுமியா சர்கார், தமீம் இக்பால், சபீர் ரஹ்மார், ருபல் ஹொசேன்

(LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ரசிகையை காயப்படுத்திய சிக்ஸர்! நேரில் அழைத்து தொப்பியை பரிசாக அளித்த ரோஹித் சர்மா!!
ரசிகையை காயப்படுத்திய சிக்ஸர்! நேரில் அழைத்து தொப்பியை பரிசாக அளித்த ரோஹித் சர்மா!!
ஸ்டம்புகளை தெறிக்கவிடும் பும்ராவின் ‘யார்க்கர்’ ரகசியம் என்ன- அவரே விளக்குகிறார்!
ஸ்டம்புகளை தெறிக்கவிடும் பும்ராவின் ‘யார்க்கர்’ ரகசியம் என்ன- அவரே விளக்குகிறார்!
இந்திய- வங்கதேச போட்டியில் பங்கேற்ற 87 வயது ரசிகை- போட்டி முடிந்தவுடன் ஆசி பெற்ற கோலி! #Video
இந்திய- வங்கதேச போட்டியில் பங்கேற்ற 87 வயது ரசிகை- போட்டி முடிந்தவுடன் ஆசி பெற்ற கோலி! #Video
“ரோகித்தான் பெஸ்ட்..!”- சொல்வது கிங் கோலி
“ரோகித்தான் பெஸ்ட்..!”- சொல்வது கிங் கோலி
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
Advertisement