அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்

Updated: 24 June 2019 12:14 IST

‘கோலி குற்றச்சாட்டை ஒப்புகொண்டுள்ளார். மேட்ச் ரெப்ரி கிறிஸ் பிராட் முன்வைத்த அபராதங்களை கோலி ஏற்று கொண்டார்’ என ஐசிசி அறிக்கை வெளியிட்டது.

Virat Kohli Fined For Breaching ICC Code Of Conduct During India vs Afghanistan Match
ஐசிசியின் விதிகளில் 2.1 யை மீறினார் கோலி © AFP

கடந்த சனிக்கிழமை உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. இந்த போட்டியில் போராடி வெற்றி பெற்றது இந்தியா.

ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் போது, ஆட்டத்தின் 29வது ஓவரில் எல்.பி.டபிள்யூ கேட்டு ஆக்ரோஷமான முறையில் அம்பயர் அலிம் தாரிடம் முறையிட்டார் இந்தியா அணியின் கேப்டன் விராத் கோலி.

அம்பயரிடம் ஆக்ரோஷமாக முறையிட்டதால் விராத் கோலிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்திரவித்துள்ளது. ஐசிசியின் விதிகளில் 2.1 யை மீறியதால் கோலி மீது லெவல் 1 குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன்  கீழ் கோலியின் போட்டி தொகையில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அம்பயர்கள் அலிம் தார், ரிச்சர்ட் இலிங்வாத், மூன்றாவது அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்போராக் மற்றும் மைக்கெல் கோக் ஆகியோர் கோலி, ஐசிசி விதிகளை மீறியதாக புகார் அளித்தனர்.

‘கோலி குற்றச்சாட்டை ஒப்புகொண்டுள்ளார். மேட்ச் ரெப்ரி கிறிஸ் பிராட் முன்வைத்த அபராதங்களை கோலி ஏற்று கொண்டார்' என ஐசிசி அறிக்கை வெளியிட்டது.

கோலிக்கு ஒரு குறைபாடு புள்ளியும் வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா எதிராக ஜனவரி 15,2018 நடந்த போட்டியிலும் கோலிக்கு ஒரு குறைபாடு புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக கோலிக்கு தற்போது இரண்டு குறைபாடு புள்ளிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Comments
ஹைலைட்ஸ்
  • 29வது ஓவரில் எல்.பி.டபிள்யூ கேட்டு ஆக்ரோஷமாக முறையிட்டார் கோலி
  • போட்டி தொகையில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • ஜனவரி 15,2018 நடந்த போட்டியில் கோலிக்கு ஒரு குறைபாடு புள்ளி வழங்கப்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
கெஸ்ரிக் வில்லியம்ஸின் "நோட்புக்" கிண்டலுக்கு பதிலளித்த விராட் கோலி!
Advertisement