நிறைவுற்ற போட்டிகள்   
Match 28, தி ரோஸ் பவுல் , சவுத்தாம்ப்டன், Jun 22, 2019
இந்தியா இந்தியா
224/8 (50.0/50)
ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்
213 (49.5/50)
இந்தியா அணி, 11 ரன்னில் ஆப்கானிஸ்தான் வை வென்றது

World Cup 2019: ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!

Updated: 22 June 2019 23:18 IST

15 பேர் கொண்ட இந்திய அணியில் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் ஆடும் 11 பேரில் இடம் பிடிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

India vs Afghanistan Live Score, IND vs AFG Live Cricket Score, World Cup 2019: Mohammed Shami Set For World Cup 2019 Debut As India Face Afghanistan
ஆப்கானிஸ்தான் இன்னும் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததால், அந்த அணிக்கு உள்ளேயே பல பிரச்னைகள் எழந்துள்ளன. © AFP

இன்று உலகக் கோப்பைத் தொடரில் சவுத்தாம்டனில் இருக்கும் தி ரோஸ் பவுலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் ஆடும் 11 பேரில் இடம் பிடிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காயமடைந்த ஷிகர் தவானுக்கு பதில் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் இன்னும் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததால், அந்த அணிக்கு உள்ளேயே பல பிரச்னைகள் எழந்துள்ளன. அந்த அணியின் பயிற்சியாளர் ஃபில் சிம்மோன்ஸ், அணியின் கேப்டன் குறித்து தேர்வுக் குழுவிடம் புகார் அளிக்க உள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா, உயரே போகப் பார்க்கும். ஆப்கானிஸ்தான், தனது முதல் வெற்றிக்காக போராடும்.

ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கருக்கு, பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் ஆப்கானிஸ்தான் போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். இதனால் அணியில் உள்ள தினேஷ் கார்த்திக் மற்றும் பன்ட் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தவான் மற்றும் ஷங்கர் போல, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரும் ஆப்கான் போட்டியில் களமிறங்குவதில் சந்தேகம் நீடித்து வருகிறது. புவிக்கு பதில் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அப்படி களமிறக்கப்பட்டால் ஷமி, இந்த முறை உலகக் கோப்பையில் விளையாடப் போகும் முதல் போட்டி இதுவாகவே இருக்கும். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்
அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
World Cup 2019: ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!
World Cup 2019: ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!
“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!
காயத்தால் அவதிப்படும் இந்தியா; அணியில் இடம் பிடிப்பாரா பன்ட்- ஆப்கான் போட்டியில் என்ன நடக்கும்?
காயத்தால் அவதிப்படும் இந்தியா; அணியில் இடம் பிடிப்பாரா பன்ட்- ஆப்கான் போட்டியில் என்ன நடக்கும்?
Advertisement