உலகக் கோப்பை 2019: இந்தியா vs நியூசி; ஆஸி vs இங்கிலாந்து- அரையிறுதி சுவாரஸ்யங்கள்!

Updated: 08 July 2019 10:32 IST

நியூசிலாந்து அணி, உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், லீக் சுற்றில் தனது கடைசி 3 போட்டிகளிலும் தோல்விகண்டது.

India To Meet New Zealand, Australia Face England In Semi-Finals
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தனது கடைசி லீக் போட்டியை, உலகக் கோப்பைத் தொடரின் பெரும் பகுதிக்குத் திணறி வந்த தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது © AFP

‘இந்த ட்விஸ்ட்ட எதிர்பார்த்திருக்க மாட்டீங்களே' என்று சொல்லும் அளவுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் கடைசியில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. எப்படியும் அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவுடன் தனது கடைசி லீக் போட்டியை இழந்து, 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. என்னவென்றாலும், இங்கிலாந்துடன்தான் அரையிறுதியில் மல்லுக்கட்ட வேண்டும் என்று நினைத்த இந்தியா, ‘அவுட் ஆஃப் ஃபார்ம்' நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. 

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தனது கடைசி லீக் போட்டியை, உலகக் கோப்பைத் தொடரின் பெரும் பகுதிக்குத் திணறி வந்த தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது கண்டிப்பாக கஷ்டமாக இருக்கும். குறிப்பாக இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகளை சர்வசாதரணமாக பந்தாடிய பிறகு, தென் ஆப்ரிக்கா போட்டியில் ஆஸ்திரேலியா தோற்க வாய்ப்பே இல்லை என்று ஆருடம் சொல்லப்பட்டது. 

ரவுண்டு ராபின் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா இழக்கும் இரண்டாவது போட்டி இது. இதற்கு முன்னர், இந்தியாவுடனான லீக் போட்டியில் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா. இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்விண்டது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி, மழையால் ரத்து செய்யப்பட்டதால், அதில் முடிவு கிடைக்காமல் போனது. இனி லீக் சுற்றில் என்ன நடந்தது என்பது குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. மூன்றே போட்டிகள்தான்… 2019 உலகக் கோப்பையின் சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும். 

இந்தியா - நியூசிலாந்து போட்டியை விட, பரமவைரிகளான ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியைத்தான் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்துள்ளது. எப்போதும் தனது ‘மைண்டு கேம்ஸ்' மூலம் ஆட்டத்துக்கு முன்னரே விளையாட ஆரம்பிக்கும் ஆஸ்திரேலியா, இந்த முறையும் அதை கணக்கச்சிதமாகத் தொடங்கியுள்ளது. 

“இங்கிலாந்து அணியில், பல உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 அணியாக இங்கிலாந்துதான் உள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். அதை வைத்துப் பார்த்தால், எங்கள் மீது எந்தவித அழுத்தமும் இல்லை. அவர்கள் தோல்வியடைந்தால் இழக்க நிறைய இருக்கிறது. எங்களுக்கோ இந்தப் போட்டியிலிருந்து பெறுவதற்குத்தான் அதிகம் உள்ளது” என்று தீயைப் பற்றவைத்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான். 

நியூசிலாந்து அணி, உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், லீக் சுற்றில் தனது கடைசி 3 போட்டிகளிலும் தோல்விகண்டது. இன்னும் சொல்லப் போனால், அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் ஒரே புள்ளிகள்தான் எடுத்துள்ளன. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து, 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. 

ஃபார்ம இல்லாமல் தவித்து வரும் தனது அணி குறித்து, நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட், “மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை. இந்தியா, மிகவும் திறமை வாய்ந்த அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், நியூசிலாந்தையும் யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்” என்று எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்துள்ளார். அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். 

Comments
ஹைலைட்ஸ்
  • அரையிறுதியில், இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொள்ளும்
  • ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை எதிர்கொள்ளும்
  • இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்
தொடர்புடைய கட்டுரைகள்
பெங்களூரு போலிஸின் நகைச்சுவையான ட்விட்டுக்கு வந்த எதிர்மறை கருத்துக்கள்!
பெங்களூரு போலிஸின் நகைச்சுவையான ட்விட்டுக்கு வந்த எதிர்மறை கருத்துக்கள்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே காலமானார்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே காலமானார்!
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
3வது டி20: தென் ஆப்ரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
Advertisement