48 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி டிக்கெட்!

Updated: 06 May 2019 14:12 IST

இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்த வருடத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் யுத்தமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி ஜூன் 16 அன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

India-Pakistan World Cup 2019 Match Tickets Sold Out Within 48 Hours
இந்தியா பாகிஸ்தான் போட்டி டிக்கெட் விற்பனை துவங்கி 48 மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டதாக மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது. © AFP

இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்த வருடத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் யுத்தமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி ஜூன் 16 அன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. இதே பைதானத்தில் ஜூன் 26ம் தேதி இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன. ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி டிக்கெட் விற்பனை துவங்கி 48 மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டதாக மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல உலகக் கோப்பையில் அதிக எதிர்பார்ப்புள்ள ஆட்டமாக இது பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் லான்ஷயரின் விற்பனை மேலாளர் "இந்தியா இங்கிலாந்து போட்டியை விட இதற்கு அதிக கூட்டம் கூடும்" என்று கூறினார்.

''இது உண்மையிலேயே ஒரு யுத்தமாக தான் இருக்கும். கடந்த வருடம் இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா டி20 போட்டியில் மோதியது. அதற்கு அதிகப்படியாக கூட்டம் கூடியது. அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மைதானம், இந்திய மூவர்ணத்தால் பெயிண்ட் செய்யப்பட்டு, பாரத் ஆர்மியின் ஆரவாரத்தில் நனைந்தது" என்றார். மேலும், "இந்த மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதே பெரிய மகிழ்ச்சியான விஷயம்" என்றார்.

இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கூட்டும் விஷயங்களில் ஈடுபட்டு வருவதாக மேலாளர் வொயிட் ஹெட் தெரிவித்தார்.

போட்டியின் போது பாரத் ஆர்மியின் சார்பில் பஞ்சாபி பாடகர் குரு ரன்தாவா பாடவுள்ளார்.

இதுவரை உலகக் கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா பாகிஸ்தான் போட்டி ஜூன் 16 அன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது
  • உலகக் கோப்பையில் அதிக எதிர்பார்ப்புள்ள ஆட்டமாக இது பார்க்கப்படுகிறது
  • உலகக் கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதே இல்லை
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து... காயமின்றி தப்பிய குடும்பத்தினர்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
கர்நாடகா ப்ரீமியர் லீக்: 8 விக்கெட்டுகள், 134 ரன்கள்... புது சாதனை படைத்த கிருஷ்ணப்பா கவுதம்
கர்நாடகா ப்ரீமியர் லீக்: 8 விக்கெட்டுகள், 134 ரன்கள்... புது சாதனை படைத்த கிருஷ்ணப்பா கவுதம்
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
Advertisement