''இந்தியா - பாகிஸ்தான் மேட்சில் மழைதான் வெற்றி பெறும்'' - சொயிப் அக்தர் கணிப்பு!!

Updated: 15 June 2019 17:35 IST

உலகக்கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Rain May Win India-Pakistan World Cup Clash, Quips Shoaib Akhtar
மழையால் 4 உலகக்கோப்பை ஆட்டங்கள் இதுவரை பாதிக்கப்பட்டன. © AFP

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியாவும் - பாகிஸ்தானும் மோதவுள்ள நிலையில் போட்டியில் மழைதான் வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் சொயிப் அக்தர் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் மழையால் 4 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான ஆட்டமும் ஒன்றாகும். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தானில் எந்த அணி வலுவானது என்ற விவாதம் ஒருபக்கம் இருந்தாலும், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுதான் ரசிகர்களின் முக்கிய கவலையாக உள்ளது. 
 


இந்த நிலையில் நாளைய ஆட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சொயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அது மழை நீர் மைதானத்தில் நிரம்பி வழிவது போலவும், இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் அதற்குள் இருப்பதுபோலவும் காட்சி உள்ளது. இந்த மீம்சை வெளியிட்டு நாளைய போட்டி இப்படித்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார். 


(With IANS Inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன
  • மழையால் 4 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது
  • அக்தரின் ட்விட்டை யுவராஜ் சிங் ரி ட்வீட் செய்துள்ளார்.
தொடர்புடைய கட்டுரைகள்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
'நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம்' - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்!!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
Advertisement