"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி

Updated: 17 June 2019 10:47 IST

இந்த வெற்றி மூலம் ஒட்டுமொத்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா முன்னிலை வகிக்கிறது இந்தியா.

India vs Pakistan: India Never Approach Pakistan Game With "Too Much Emotion", Says Virat Kohli
நேற்றைய போட்டியில் 7 பவுண்டரியுடன் 65 பந்தில் 77 ரன்கள் குவித்தார் கோலி. © AFP

கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை டக்வோர்த் லூயிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா முன்னிலை வகிக்கிறது. சாம்பியன் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதற்கும் பழி தீர்த்துக் கொண்டது. இந்த வெற்றியை கோலி உணர்ச்சிப்பூர்மாக பார்க்காமல் சிறந்த போட்டியை வென்றதாக பார்க்கிறேம் என்று கூறியுள்ளார்.

சாம்பியன் கோப்பை இறுதி போட்டி தவிர அவர்களை அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக எதிர் கொண்டிருக்கிறோம். ஆட்டத்தை உணர்ச்சிப்பூர்வமாக அணுகினால் முடிவுகள் சாதகமில்லாமல் கூட மாறும் என்றார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. ராகுல் மற்றும் ரோஹித் துவக்க வீரர்களாக களமிறங்குகி அபாரமான துவக்கத்தை தந்தனர்.

ரோஹித் அபாரமாக ஆடி இந்தியாவுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தந்தார். இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். ஒருகட்டத்தில் இரட்டை சதமடிப்பார் என்ற அளவுக்கு ஆடி வந்தார். எதிர்பாராத விதமாக 39வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் ஷர்மா 113 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 140 ரன்கள் குவித்தார்.

ஷிகர் தவானுக்கு மாற்றாக களமிறங்கிய ராகுல் 78 பந்தில் 57 ரன்கள் குவித்து ரோஹித் ஷர்மாவுக்கு பார்ட்னர்ஷிப் தந்தார்.

ராகுலின் ஆட்டத்தை பாராட்டிய கோலி, ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சிதான் ஸ்கோர் 336ஐ எட்ட காரணம் என்றார்.

மேலும், கோலி குல்தீப் யாதவையும் புகழ்ந்தார்ம் பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் ஃப்கர் சமான் மற்றும் பாபர் அஸாமின் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது மட்டுமின்றி அடுத்தடுத்த ஓவரில் இருவரது விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

நேற்றைய போட்டியில் 7 பவுண்டரியுடன் 65 பந்தில் 77 ரன்கள் குவித்தார் கோலி.

Comments
ஹைலைட்ஸ்
  • டாஸ் வென்ற பாகிஸ்தான் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது
  • இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி 136 ரன்கள் குவித்தனர்
  • ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா தனது 24வது சதத்தை நிறைவு செய்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முடிகிறது" - ஜடேஜா!
"கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முடிகிறது" - ஜடேஜா!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
Advertisement