இந்திய உலகக் கோப்பை அணியில் யாருக்கு என்ன பலம்?

Updated: 22 May 2019 22:24 IST

இரண்டு முறை உலக சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தில் நடக்கும் 2019 உலகக் கோப்பைக்கு புறப்பட்டுள்ளது.

Team Profile, India: Virat Kohli Leads Crack Outfit That Is One Of The Favourites For The Trophy
1983 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது இந்தியா. © AFP

இரண்டு முறை உலக சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தில் நடக்கும் 2019 உலகக் கோப்பைக்கு புறப்பட்டுள்ளது. 1983 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வென்றும், 2003 உலகக் கோப்பையில் ரன்னர் அப் பட்டம் வென்றும்,  1987,1996,2015 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிக்கும் முன்னேறியது இந்திய அணி.

விராட் கோலி (கேப்டன்)

கோலி கடைசி இரண்டு சீசன்களில் அபாரமாக ஆடியுள்ளார். 2017-18 சீசனில் 1833 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 97.5, ஸ்ட்ரைக் ரேட் 98.84. இந்த சீசனில் 1255 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 69.93 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 96.19

இது கோலியின் மூன்றாவது உலகக் கோப்பை தொடர். 17 போட்டிகளில் ஆடி 587 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 2015ல் பாகிஸ்தானுக்கு எதிராக 105 ரன்கள் குவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா கடைசி இரண்டு சீசன்களில் அபாரமாக ஆடியுள்ளார். 2017-18 ஒருநாள் போட்டிகளில் 1463 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 64.65 ஸ்ட்ரைக் ரேட் 96.60. இந்த சீசனில் 1416 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 76.63 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 93.14. மேலும் இலங்கையுடன் டிசம்பர் 13 அன்று 208 என்ற பெரிய இன்னிங்ஸையும் ஆடியுள்ளார்.

2015 உலகக் கோப்பையில் 330 ரன்களை குவித்த அவர் பங்களாதேஷுடன் காலிறுதியில் 137 ரன்களை குவித்தார்.

ஷிகர் தவான் 

தவான் கடைசி இரண்டு சீசன்களில் அபாரமாக ஆடியுள்ளார். 2017-18 சீசனில் 1271 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 55.6, ஸ்ட்ரைக் ரேட் 102.98 . இந்த சீசனில் 994 ரன்கள் குவித்துள்ள அவரைன் சராசரி 44.52 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 96.63

2015 உலகக் கோப்பையில் 412  ரன்களை குவித்த அவர் தென்னாப்பிரிக்காவுடன்  137 ரன்களை குவித்தார்.

கே.எல்.ராகுல் 

2016ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு பின்பு ஒரு நாள் போட்டிகளில் ராகுல் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தான் பிரதானமாக ஆடி வருகிறார். 14 ஒருநாள் போட்டிகளில் ஆடி 343 ரன்களை குவித்துள்ளார். இதுதான் ராகுலின் முதல் உலகக் கோப்பை.

விஜய் சங்கர்

2018 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமானார் விஜய் சங்கர். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 26 போட்டிகளில் ஆடி 452 ரன்களை குவித்துள்ளார். இது விஜய் சங்கரின் முதல் உலகக் கோப்பை.

தோனி

தோனி கடைசி இரண்டு சீசன்களில் அபாரமாக ஆடியுள்ளார். 2017-18 சீசனில் 692 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 80.99  ஸ்ட்ரைக் ரேட் 81.53 . இந்த சீசனில் 533  ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 39.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 71.51.

தோனி தான் உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள அணிகளிலேயே மூத்த அனுபவமிக்க வீரர். இது தோனியின் 4வது ஐபிஎல். தோனி தலைமையில் இந்தியா 2011ல் உலகக் கோப்பையை வென்றது.

கேதர் ஜாதவ்

ஜாதவ் கடைசி இரண்டு சீசன்களில் சிறப்பாக ஆடியுள்ளார். 2017-18 சீசனில் 330 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 28.17, ஸ்ட்ரைக் ரேட் 96.55. இந்த சீசனில் 376 ரன்கள் குவித்துள்ள அவரின் சராசரி 60.5 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 89.69. கேதர் ஜாதவுக்கு இது முதல் உலகக் கோப்பை.

தினேஷ் கார்த்திக்

அணிக்கு எதிர்பாராத என்ட்ரியாக வந்தார் தினேஷ் கார்த்திக். 15 வருடங்களாக அணியில் இருக்கும் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தொடர்ச்சியாக தற்போதுதான் கிடைத்துள்ளது. தோனிக்கு மாற்றுகீப்பராக அணியில் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக்கிற்கு இது இரண்டாவது உலகக் கோப்பை.

சஹால்

2016 ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். 41 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த வருடம் ஆஸிக்கு எதிராக 6/42 என்ற சிஅறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். சஹாலுக்கு இது முதல் உலகக் கோப்பை.

குல்தீப் யாதவ் 

2017 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமானார். 44 போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சாக 6/25 என்ற பந்துவீச்சை பதிவு செய்தார். குல்தீப்புக்கு இது முதல் உலகக் கோப்பை.

புவனேஷ்வர் குமார்

2017 சீசனில் 29 விக்கெட்டுகளையும், இந்த சீசனில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இது புவனேஷ்வர் குமாருக்கு இரண்டாவது உலகக் கோப்பையாகும்.

ஹர்திக் பாண்ட்யா

இந்தியாவின் நம்பிக்கை ஆல்ரவுண்ராக விளங்குகிறார். 731 ரன்களையும், 44 விக்கெட்டுகளையும் தன்வசம் வைத்திருக்கும் ஹர்திக்கிற்கு இது முதல் உலகக் கோப்பை.

ஜடேஜா

கடைசி 25 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நல்ல பந்துவீச்சு ஆல்ரவுண்டராக விளங்குவார். 2015 உலகக் கோப்பையில் ஆடி 9 விக்கேட்டுகளை வீழ்த்தினார்.

ஷமி

2018-19 சீசனில் ஷமி 22 விக்கெட்டுகளை 13 போட்டிகளில் வீழ்த்தினார். 2015 உலகக் கோப்பையில் ஆடிய இவர், 7 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பும்ரா

49 போட்டிகளில் ஆடி 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் பந்துவீச்சு நம்பிக்கையாக பும்ரா  விளங்குகிறர். இது பும்ராவுக்கு முதல் உலகக் கோப்பை.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: பிசிசிஐ வெளியிட்ட விராட் கோலி, மயங்க் அகர்வாலின் உரையாடல்!
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 493/3
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
Advertisement