“இந்திய பேட்டிங்கில் 4வது இடம் இவருக்குத்தான்”- யுவராஜ் சொல்லும் வீரர் யார் தெரியுமா?

Updated: 03 July 2019 10:15 IST

உலகக் கோப்பைத் தொடரின் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரிஷப் பன்ட், அணியில் சேர்க்கப்பட்டார்

India vs Bangladesh: Yuvraj Singh Feels India Have Found Their No.4 In Rishabh Pant
விஜய் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆடும் 11 பேரில் பன்ட் இடம் பெற்றார்.  © AFP

2019 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று இந்தியா - வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. 

இந்த ஆட்டத்தில் ரிஷப் பன்ட், 4வது இடத்தில் களமிறக்கிவிடப்பட்டார். அவரும் அதிரடியாக 48 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து, ‘இந்திய அணிக்காக யார் 4வது இடத்தில் களமிறங்குவார்?' என்று கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. அந்த இடத்தில் கே.எல்.ராகுல், விஜய் ஷங்கர், ஹர்திக் பாண்டியா போன்றோர் முதலில் இறக்கிவிடப்பட்டனர். ஆனால், எந்த ஒரு வீரரும் தொடர்ச்சியாக அந்த இடத்தில் இறக்கிவிடப்படவில்லை. ஆனால், கடந்த இரண்டு போட்டிகளாக பன்ட், அந்த இடத்தில் இறங்கி கலக்கிவருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில்தான், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், “நமது அணியின் 4வதாக களமிறங்கப் போகும் வீரரை நாம் அடையாளம் கண்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். ரிஷப் பன்ட்தான் அது. அவரை முறையாக வழி நடத்துவோம்” என்று கருத்து கூறியுள்ளார். 

இதற்கு முன்னரும் பன்டிற்கு யுவராஜ் ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ‘அணியில் நான் இல்லாத வெற்றிடத்தை ரிஷப் பன்டால் நிரப்ப முடியும்' என்று வெளிப்படையாக சொன்னார் யுவராஜ்.

உலகக் கோப்பைத் தொடரின் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரிஷப் பன்ட், அணியில் சேர்க்கப்பட்டார். விஜய் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆடும் 11 பேரில் பன்ட் இடம் பெற்றார். 

இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பன்ட், இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர, 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளையும் பன்ட் விளையாடியுள்ளார். 

Comments
ஹைலைட்ஸ்
  • வங்கதேசப் போட்டியில் பன்ட், 48 ரன்கள் அடித்தார்
  • தவானுக்கு பதில் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
  • கடந்த 2 போட்டிகளாக பன்ட், ஆடும் 11 பேரில் ஒருவராக இருக்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"கிரிக்கெட்டில் ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும் பன்ட்" - விக்ரம் ராத்தோர்!
"பன்ட் இப்படி விளையாடினால், அதற்கான எதிர்வினையை சந்திப்பார்" - ரவி சாஸ்திரி!
"பன்ட் இப்படி விளையாடினால், அதற்கான எதிர்வினையை சந்திப்பார்" - ரவி சாஸ்திரி!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
"கிரிக்கெட்டராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் மேம்பட வேண்டியுள்ளது" - ரிஷப் பன்ட்!
"கிரிக்கெட்டராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் மேம்பட வேண்டியுள்ளது" - ரிஷப் பன்ட்!
Advertisement