"ஒரு அணியாக செயல்பட தவறியது தான் தோல்விக்கு காரணம்" - ரோஹித் ஷர்மா

Updated: 12 July 2019 16:08 IST

உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா.

India "Failed To Deliver As A Team", Says Rohit Sharma After World Cup Ouster
தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தனர். © AFP

உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றார் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா. இன்று ட்விட்டரில் இந்தியா தோல்வியுற்றதற்கு தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அரையிறுதியில் தோற்று உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. இந்தத் தொடரில் ஐந்து சதங்கள் குவித்த ரோஹித் ஷர்மா, அரையிறுதியில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

"ஒரு அணியாக தேவையான போழுது செயல்படாமல் இருந்து விட்டோம். 30 நிமிடங்கள் மோசமான கிரிக்கெட் தான் எங்களை கப் இழக்க செய்தது. என் மனம் கனத்துள்ளது, உங்களுக்கும் அப்டிதான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்திய ரசிகர்களின் ஆதரவு மிகவும் பெரிதாக இருந்தது. நாங்கள் விளையாடிய எல்லா பகுதிகளிலும் நீல நிறத்தை நிரப்பியதற்கு நன்றி" என்று ட்விட் செய்திருந்தார் ரோஹித் ஷர்மா.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு நியூசிலாந்தை 239 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இதில் புவனேஷ்வர் குமார் 43 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முக்கிய தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தனர். இந்தியா 3.1 ஓவருக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அடுத்த ஆட வந்த தினேஷ் கார்த்திக் ஆறு ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். இந்தியா 10 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து 24 ரன்கள் எடுத்தது.

ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி, ஏழாவது விக்கெட்டுக்கு தோனியுடன் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இந்திய அணியில் ஜடேஜா 77 ரன்கள் எடுத்தார், தோனி அரைசதம் அடித்தவுடன் அவுட் ஆனார்.

இந்தியா  49.3 ஓவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து, 240 இலக்கை அடையாமல் தோல்வியுற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?
இந்தியா vs பங்களாதேஷ் 3வது டி20 போட்டி: எப்போது தொடங்குகிறது?
ரோஹித் ஷர்மாவுக்கு 100வது டி20 போட்டிக்கான தொப்பி வழங்கியது யார் தெரியுமா?
ரோஹித் ஷர்மாவுக்கு 100வது டி20 போட்டிக்கான தொப்பி வழங்கியது யார் தெரியுமா?
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
"ரோஹித் ஷர்மா செய்வதை, கோலியால் கூட செய்ய முடியாது" - வீரேந்தர் சேவாக்
Advertisement