இங்கிலாந்துக்கு டாட்டா; ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்தியா!

Updated: 28 June 2019 09:47 IST

இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை.

India Displace England To Claim Top ODI Ranking
வரும் ஜூன் 30 ஆம் தேதி, இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான உலகக் கோப்பைப் போட்டி நடக்க உள்ளது © Twitter

உலகக் கோப்பைத் தொடரில் பெற்ற தொடர் வெற்றிகளைத் அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து ஐசிசி சமீபத்தில் வெளியிட்ட தகவலில், 123 புள்ளிகளுடன் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா, முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை. அதே நேரத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் தோல்வி கண்டது. 

வரும் ஜூன் 30 ஆம் தேதி, இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான உலகக் கோப்பைப் போட்டி நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவரே, அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிப்பர். 

ஐசிசி இது குறித்த வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் வென்று, இங்கிலாந்தையும் வீழ்த்தினால், அந்த அணிக்கு 124 புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்துக்கோ, 121 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும். ஒருவேளை இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தினால், அந்த அணிக்கு 123 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலம் அந்த அணி முதலிடத்தை மீண்டும் பெறும்” என்று தெரிவித்துள்ளது.


 
 

Comments
ஹைலைட்ஸ்
  • ஜூன் 30-ல் இந்தியா - இங்கிலாந்து போட்டி நடக்க உள்ளது
  • அந்தப் போட்டியில் வெற்று பெறுவோரே, முதலிடத்தைத் தக்கவைப்பர்
  • இதுவரை உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
இந்திய அணியின் புது பயிற்சியாளர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்...!
இந்திய அணியின் புது பயிற்சியாளர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்...!
"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!
"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!
சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி!
சர்வதேச போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி!
Advertisement