அரையிறுதி தோல்வி சர்ச்சை வளையத்தில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர்!

Updated: 12 July 2019 16:51 IST

45 நாட்களாக இந்திய அணி உலகக் கோப்பையில் ஆடியதில் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் பங்களிப்பில் கேள்விகளை எழுப்பியுள்ளது பிசிசிஐ.

Team India Assistant Coach Sanjay Bangar Under Scanner After World Cup Exit
விஜய் சங்கர் அணியிலிருந்து விலகுவதற்கு முன்னால் பங்கர் அவர் முழு உடல்தகுதியுடன் உள்ளார் என்று பேட்டி தந்தார். © AFP

இந்தியா 2019 உலகக் கோப்பையிலிருந்து நியூசிலாந்துடனான அரையிறுதி தோல்வியுடன்  வெளியேற்றப்பட்டது. இந்தியா வெளியேறியதற்கு ரசிகர்களும், விமர்சகர்களும் இந்திய அணியின் நிர்வாகத்திடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்திய பயிற்சியாளருக்கு உதவும் விதமாக துறை ரீதியான பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். 45 நாட்களாக இந்திய அணி உலகக் கோப்பையில் ஆடியதில் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் பங்களிப்பில் கேள்விகளை எழுப்பியுள்ளது பிசிசிஐ.

பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்த நிலையில் சஞ்சய் பங்கர் மீது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்திய அணியின் நான்காம் நிலை வீரர் யார் என்பதை தீர்மானிக்காதது பெரிய பிரச்சனையாக கூறப்படுகிறது. 

மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக மிடில் ஆர்டரை மாற்றியதே தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார். கடந்த சில சீசன்களாகவே சஞ்சய் பங்கர் சரியான பயிர்சியை வழங்கவில்லை மேலும் நான்காம் நிலை வீரர் பிரச்சனை தீர்க்கப்படவே இல்லை. அதேபோல விஜய் சங்கர் அணியிலிருந்து விலகுவதற்கு முன்னால் பங்கர் அவர் முழு உடல்தகுதியுடன் உள்ளார் என்று பேட்டி தந்தார்.

இது தொடர்ச்சியாக நடந்து வருவதாக கூறிய அந்த அதிகாரி. ''இந்த தோல்வி எல்லாரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு சரியான தீர்வு காணப்படும். எதிர்காலத்துக்கான சிறந்த முடிவு எடுக்கப்படும்" என்றார்.

அதுபோல பயிற்சியாளர்களின் திறன் மதீப்பீடு செய்யப்பட்டு அவர்கள் அணியில் தொடர்வது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

தற்போது உள்ள மூத்த பயிற்சியாளர்கள் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் , கங்குலி, லட்சுமணனின் ஆலோசனைகளை தவிர்த்து வருவது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார். 

சில வீரர்கள் மூத்த வீரர்களிடமிருந்து அறிவுரையை நேரடியாக பெற்று ஆடிவருகிரார்கள் என்றும் அதனால் தான் அவர்கள் ஜொலிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இன்னும் 45 நாட்கள் பயிற்சியாளர்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. அதற்குள் சீரியஸான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதன்பின் பிசிசிஐ முடிவெடுத்து பயிற்சியாளர்களை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தேர்வுக்குழு நபரிடம் கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்... பதவி பறிபோகுமா?
தேர்வுக்குழு நபரிடம் கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்... பதவி பறிபோகுமா?
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபிக்க தேவையான தகுதிகள்!
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபிக்க தேவையான தகுதிகள்!
அரையிறுதி தோல்வி சர்ச்சை வளையத்தில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர்!
அரையிறுதி தோல்வி சர்ச்சை வளையத்தில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர்!
Advertisement