உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி எது: ஹர்பஜன் கணிப்பு!

Updated: 24 May 2019 17:24 IST

உலகக் கோப்பை தொடரில் ஜூன் 5ம் தேதி முதல் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

India And England Are Joint World Cup Favourites, Says Harbhajan Singh
ஹர்பஜன் 3 உலகக் கோப்பை தொடர்களிலும், இரண்டு இறுதிப்போட்டிகளிலும் ஆடியுள்ளார். © AFP

2019 இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா இருக்கும் என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார், இந்தியாவுடன் சேர்த்து தற்போது நம்பர் 1 அணியாக இருக்கும் இங்கிலாந்தும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக ஹர்பஜன் கூறினார். விராட் கோலி தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று பலரும் எதிர்பார்ப்பதாக கூறிய அவர், அழுத்தம் கோலிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அணிக்கும் தான் என்றார்.

உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், கடைசி 5 உலகக் கோப்பைகளில் 4 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கும், கடந்த 20 வருடங்களில் ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை ஆதிக்கத்தை கட்டுப்படுத்திய ஒரே அணி இந்தியாதான் என்றார்.

ஹர்பஜன் 3 உலகக் கோப்பை தொடர்களிலும், இரண்டு இறுதிப்போட்டிகளிலும் ஆடியுள்ளார். கடைசியாக 50 ஓவர் போட்டிகளில் 2016ல் இந்திய அணிக்காக ஆடினார்.

38 வயதான ஹர்பஜன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இந்தியா சவாலாக இருக்கும் என்றார். மே 30 துவங்கும் உலகக் கோப்பை தொடரில் ஜூன் 5ம் தேதி முதல் ஆட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!
Advertisement