"தோனிக்கு காய்ச்சல் வந்தால் கார்த்திக் உதவியாக இருப்பார்" - கவாஸ்கர்!

Updated: 16 April 2019 13:34 IST

உலகக் கோப்பை அணிக்கு தோனிக்கு மாற்று வீரராக 2019 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.

In MS Dhoni
அனுபவத்தை காரணம் காட்டி கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. © AFP

உலகக் கோப்பை அணிக்கு தோனிக்கு மாற்று வீரராக 2019 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தினேஷ் கார்த்திக். ரிஷப் பன்ட் மற்றும் கார்த்திக் இடையே போட்டி நிலவிவந்தது. அனுபவத்தை காரணம் காட்டி கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர் ''தோனிக்கு ஒருவேளை காய்ச்சல் வந்துவிட்டால் கார்த்திக்கின் திறமை வெளிப்படுத்த முடியும்'' என்று கூறியுள்ளார். 

"ஒருநாள் காலையில் தோனி வந்து எனக்கு காய்ச்சல், என்னால் ஆடமுடியாது என்று கூறினால் உங்களுக்கு சிறந்த விக்கெட் கீப்பர் தேவை அதை கார்த்திக் நிறைவு செய்வார்" என்றார்.

அதேசமயம் பன்ட்டின் நீக்கம் ஆச்சர்யமளிப்பதாகவும் கூறினார். அவரது பேட்டிங் அபாரமாக உள்ளது. அவரது விக்கெட் கீப்பிங்கிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் ஆறு வீரர்களில் அதிரடி இடது கை வீரர் இருப்பது பலம் பொறுத்தியதாக இருக்கும் என்றார்.

அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் அணியின் சொத்து என்றும் கூறியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ரிஷப் பன்ட் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை
  • ரிஷ்ப் பன்ட்டின் நீக்கம் ஆச்சர்யமளிக்கிறது: கவாஸ்கர்
  • அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் அணியின் சொத்து: கவாஸ்கர்
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement