''அடுத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெஸ்ட் அணியாக இருக்கும்'' : இம்ரான் கான்

Updated: 22 July 2019 20:49 IST

நியூசிலாந்து கிரிக்கெட் அணியை விட நெட் ரன்ரேட் குறைவாக இருந்ததால் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானால் பங்கேற்க முடியாமல் போனது.

Imran Khan Vows To "Reform Pakistan Cricket" After World Cup 2019 Disappointment
1992-ல் உலகக்கோப்பையை வென்ற பாக். அணியை வழிநடத்தியவர் இம்ரான் கான். © AFP

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், அதனை சீரமைக்கப்போவதாக அந்நாட்டின் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் அறிவித்துள்ளார். 

நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் லீக் சுற்றின்போது 5 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. நியூசிலாந்துடன் சம புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் நெட் ரன்ரேட் குறைவாக இருந்ததால் அந்த அணி அரையிறுதிக்கு செல்ல முடியாமல் போனது. 

இந்த நிலையில் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், 'உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர், அணியை வலுப்படுத்த முடிவு செய்துள்ளேன். அணியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு அதிருப்தியை அளித்திருந்தது. 

எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அடுத்த முறை மிகச் சிறந்த பாகிஸ்தான் அணியை பார்ப்பீர்கள்' என்று பேசினார். 

1992-ல் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்றது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இம்ரான் கான் இருந்தார். 
 
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
ஐ.நாவில் பேசிய இம்ரான் கானை வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
ஐ.நாவில் பேசிய இம்ரான் கானை வறுத்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
அடுத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெஸ்ட் அணியாக இருக்கும் : இம்ரான் கான்
''அடுத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெஸ்ட் அணியாக இருக்கும்'' : இம்ரான் கான்
சின்னசாமி மைதானத்திலும் அகற்றப்படும் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படம்
சின்னசாமி மைதானத்திலும் அகற்றப்படும் பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படம்
சூப்பர் லீக்கிலிருந்து வெளியேறிய ரிலையன்ஸுக்கு பாகிஸ்தான் வாரியம் பதில்!
சூப்பர் லீக்கிலிருந்து வெளியேறிய ரிலையன்ஸுக்கு பாகிஸ்தான் வாரியம் பதில்!
Advertisement