சிறந்த பந்துவீச்சு முறையை காப்பியடிப்பதில் தவறில்லை: பும்ரா

Updated: 07 June 2019 12:50 IST

ரோஹித் ஷர்மாவின் 23வது ஒருநாள் சதத்தால் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எளிதாக வீழ்த்துயது இந்தியா.

Jasprit Bumrah Says If There’s A Perfect Bowling Action In The World, He’ll Try To Copy It
முதலில் பந்து வீசிய இந்திய அணிக்கு பும்ரா சிறப்பான துவக்கத்தை தந்தார். © AFP

ரோஹித் ஷர்மாவின் 23வது ஒருநாள் சதத்தால் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எளிதாக வீழ்த்துயது இந்தியா. ரோஹித் சிறப்பாக ஆடினாலும் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியவர் பும்ரா தான். முதலில் பந்து வீசிய இந்திய அணிக்கு பும்ரா சிறப்பான துவக்கத்தை தந்தார். 6 ஓவர்களுக்குள் துவக்க வீரர்களை ஆட்டமிழக்க செய்தார். 10 ஓவர்கள் வீசி 35 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் பேசிய பும்ரா '' நான் என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டே இருப்பேன். சில நல்ல விஷயங்களை நான் சேகரித்து வைத்துக்கொள்வேன். உலகில் சில பந்திவீச்சு முறைகள் நன்றாக உள்ளது என்றால் நான் அதனை காப்பி அடித்து கொள்வேன். அதில் தவறில்லை எல்லாமே கற்றல் தான்" என்றார்.

25 வயதான பும்ரா அவருகென ஒரு தனித்துவமான பந்துவீச்சு முறையை கொண்டுள்ளார். ஆட்டத்துக்கு ஒரு சிறந்த மாணவனாக இருக்க வேண்டும். "100 கோடி பேரின் எதிர்பார்ப்பு என்மீது இருந்தாலும் அணியின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்வது எனது முதன்மையான பணியாக இருக்கும்" என்றார்.

பும்ரா வலைபயிற்சி தனக்கு பெரிதும் உதவியதாக சொன்னார். "புதிய பந்து , கடைசி கட்ட ஓவர்கள் என பல விஷயங்களுக்கு பயிற்சி அவசியம்" என்றார்.

கேப்டன் கோலி பும்ரா குறித்து பேசிய போது ''வலைபயிற்சியில் நமது டெக்னிக்குகளை அவரிடம் காட்டக்கூடாது. அதனை பும்ரா அறிந்துவிட்டால் ஆபத்துதான். உதாரணமாக ஒருவருக்கு ஷார்ட் பால் பிரச்சனை என்றால் அதனை கட்டாயம் அவர் பும்ராவிடம் எதிர்கொள்வார்" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!
"இது அவருடைய கடைசி ஹாட்ரிக்காக இருக்காது" - பும்ரா குறித்து இர்பான் பதான்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
"வாழ்க்கையை வாழுங்கள்": பும்ராவின் பந்துவீச்சை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கரின் பதில்!
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் அபார முன்னிலை பெறுமா இந்தியா?
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பில் அபார முன்னிலை பெறுமா இந்தியா?
"வேகப்பந்து வீச்சில் சிறந்தவர்" - பும்ரா குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர்!
"வேகப்பந்து வீச்சில் சிறந்தவர்" - பும்ரா குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர்!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா!
Advertisement