கிரிக்கெட் உலகக் கோப்பை: அதிகாரபூர்வப் பாடலை வெளியிட்ட ஐசிசி!

Updated: 18 May 2019 09:17 IST

இந்தியா, தனது முதல் போட்டியை தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக, ஜூன் 5 ஆம் தேதி விளையாடும். 

ICC Releases Official Song For Cricket World Cup 2019
இந்தியா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு, இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது.  © YouTube

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வப் பாடலை வெளியிட்டுள்ளது. லோரீன் என்கிற கலைஞர் மற்றும் பிரிட்டிஷ் பேண்ட் ருடிமென்டல் ஆகியோர் இணைந்து உலகக் கோப்பைப் பாடலை கம்போஸ் செய்துள்ளனர். பாடலுக்கு ‘ஸ்டாண்டு பை' (Stand By) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல், இனி பிரிட்டனில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் உலகக் கோப்பைத் தொடரின் போதும் ப்ளே செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ஆம் தேதி முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆரம்பமாக உள்ளது. 

முழு வீடியோவையும் இங்கே பாருங்கள்:

உலகக் கோப்பையின் முதல் போட்டி, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையில் நடக்கும். லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடத்தப்படும். உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் தொடர்களில் கிரிக்கெட் உலகக் கோப்பையும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடரின் முதலில் ரவுண்டு ராபின் போட்டிகள் நடக்கும். இந்தச் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாடும். அதைத் தொடர்ந்து ஜூலை 14 ஆம் தேதி டாப் 4 அணிகள், அரையிறுதியில் மோதும். 

ஒன்றரை மாதங்களுக்கு நடக்கும் இந்தத் தொடரில் மொத்தமாக 48 போட்டிகள் நடக்கும். தற்போது நடப்பு சாம்பியனாக இருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதுவரை அந்த அணி, 5 முறை உலகக் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. 

இந்தியா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு, இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது. 

இந்தியா, தனது முதல் போட்டியை தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக, ஜூன் 5 ஆம் தேதி விளையாடும். 

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தப் பாடலுக்கு 'ஸ்டாண்டு பை' எனப் பெயரிடப்பட்டுள்ளது
  • மே 30 முதல் உலகக் கோப்பை ஆரம்பமாகிறது
  • மொத்தமாக 45 நாட்களுக்கு இந்தத் தொடர் நடக்க உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட தர்மசாலா சென்றது இந்திய அணி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட தர்மசாலா சென்றது இந்திய அணி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!
Advertisement