இந்தியா பாகிஸ்தான் போட்டி... ஐசிசியை சாடும் கிரிக்கெட் விமர்சகர்கள்!

Updated: 17 June 2019 16:10 IST

மீண்டும் 5 ஓவர்கள் ஆடலாம் என்ற நிலையில் ஆட்டம் துவங்கப்பட்ட போது 5 ஓவரில் 136 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

India vs Pakistan: ICC Defends India-Pakistan Finish As Experts Slam "Farce"
பிபிசியின் கிரிக்கெட் செய்தியாளர் ஜோனதன் ஆனியூ இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். © AFP

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானுக்கு ஒரு எட்ட முடியாத இலக்கை நிர்ணயித்தது. 337 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் 166-7 என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது 35 ஓவர்களை மட்டுமே பாகிஸ்தான் சந்தித்திருந்தது. மீண்டும் 5 ஓவர்கள் ஆடலாம் என்ற நிலையில் ஆட்டம் துவங்கப்பட்ட போது 5 ஓவரில் 136 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனால் 40 ஓவரில் 302 ரன்கள் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

பிபிசியின் கிரிக்கெட் செய்தியாளர் ஜோனதன் ஆனியூ இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேபோல கீரீம் ஸ்வானும் பாகிஸ்தானை 28 ரன்களை ஓவருக்கு அடிக்க வேண்டும் என்று களமிறங்க சொல்வது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பினார்.

"இப்போது இந்த நிகழ்வை குழந்தைகளிடம் எதையாவது சொல்லி சரி கட்டலாம். ஆனால் எதிர்காலத்தில் இது அர்த்தமற்றதாக இருக்கும்" என்றார்.

1992 சாம்பியனான பாகிஸ்தான் தற்போது 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை தொடரில் 9வது இடத்தில் உள்ளது.

நெட் ரன்ரேட்தான் அரையிறுதிக்கு முன்னேறும் முக்கியமான அம்சம் எனகூறும் ஐசிசி இதுபோன்ற விதிகள் மூலம் ஒரு அணியின் அரையிறுதி வாய்ப்பை மங்கடிக்கும். இதனால் பாகிஸ்தான் ரன்ரேட்டை உயர்த்துவது கடினம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
ஒருநாள் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக இணையும் மயங்க் அகர்வால்?
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 3வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
Ranji Trophy: போட்டியை தாமதப்படுத்திய களத்துக்குள் நுழைந்த பாம்பு!
Ranji Trophy: போட்டியை தாமதப்படுத்திய களத்துக்குள் நுழைந்த பாம்பு!
Advertisement