விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!

Updated: 01 July 2019 18:56 IST

மாயன்க் அகர்வால், சென்ற ஆண்டு இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

Mayank Agarwal Replaces Vijay Shankar, ICC Clears Change
இந்திய அணியில் முன்னர் இடம் பெற்றிருந்த, ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  © Twitter

காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கால் விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த விஜய் சங்கர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இதையடுத்து இளம் வீரரான மாயன்க் அகர்வாலை, அணியில் சேர்க்க பிசிசிஐ அமைப்பு, ஐசிசி-யிடம் அனுமதி கோரியது. அதற்கான அனுமதி தற்போது தரப்பட்டுள்ளது. 

இது குறித்து ஐசிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உலகக் கோப்பையின் மீதமுள்ள போட்டியில் காயமடைந்த விஜய் சங்கருக்கு பதிலாக மாயன்க் அகர்வாலை சேர்ப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாயன்க் அகர்வால், சென்ற ஆண்டு இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் இன்னும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2019 உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா 7 போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் 5-ல் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக இந்திய அணி, இலங்கை மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது. இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்தியா, அரையிறுதி செல்வது உறுதியாகிவிடும். 

இந்திய அணியில் முன்னர் இடம் பெற்றிருந்த, ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Comments
ஹைலைட்ஸ்
  • Vijay Shankar was ruled out of the World Cup 2019 due to toe injury
  • Mayank Agarwal was named as his replacement in the squad
  • ICC has cleared Mayank's inclusion in the Indian squad
தொடர்புடைய கட்டுரைகள்
Ravichandran Ashwin Birthday: வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
Ravichandran Ashwin Birthday: வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய அணியினருடன்
இந்திய அணியினருடன் 'போட் பார்ட்டி' கொண்டாடிய அனுஷ்கா ஷர்மா!
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!
விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகல்!!
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகல்!!
Advertisement