“இந்தியா ஏமாத்திடுச்சு, நியூசிலாந்து காப்பாத்துமா…”- பாகிஸ்தானின் அரையிறுதி பிளான்!

Updated: 03 July 2019 11:36 IST

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றிருந்தால், பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவானது இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும்

"Disappointed By India, Depending On New Zealand": How Pakistan Plan To Reach World Cup Semis
“நியூசிலாந்து, எங்களுக்காக இங்கிலாந்தை வீழ்த்தும் என நம்புகிறோம்" © AFP

உலகக் கோப்பை 2019-ன், அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் தகுதி பெற்றுவிட்டன. கடைசி இரண்டு இடங்களுக்கான போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது. தற்போதைக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 3வது மற்றும் 4வது இடங்களில் இருக்கின்றன. இன்று இந்த இரண்டு அணிகளும் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியானது, அரையிறுதிக்குத் தகுதி பெறும் எனத் தெரிகிறது.

இன்றைய போட்டியில் எந்த அணி தோல்வியடைந்தாலும், அவர்கள் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று சொல்வதற்கில்லை. காரணம், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தைத் தவிர பாகிஸ்தானுக்கு மட்டும்தான் அரையிறுதிக்கு வர வாய்ப்புள்ளது. இங்கிலாந்து இன்றைய போட்டியில் தோற்று, பாகிஸ்தான் அடுத்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அணிகள் தரவரிசையில் மாற்றம் வரும். 

ஒருவேளை நியூசிலாந்து தோல்வியடைந்தாலும், அந்த அணிக்கு அதிக நெட் ரன்ரேட் இருப்பதால், பாகிஸ்தான் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு குறைவுதான். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றிருந்தால், பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவானது இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும். ஆனால், இந்திய அணி தோல்வியடைந்தது பாகிஸ்தானில் பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த ஆதங்கத்தை அந்த அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் மற்றும் இன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் ஆகியோர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். 

“இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய விதத்தை எங்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறாதது பெறும் ஏமாற்றத்தைத் தந்தது. அப்படி நடந்திருந்தால், எங்களுக்கான கதவு திறந்திருக்கும்” என்று பொங்குகிறார் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்.

இன்றைய நியூசிலாந்து - இங்கிலாந்து போட்டி குறித்து பேசிய ஆர்த்தர், “நியூசிலாந்து, எங்களுக்காக இங்கிலாந்தை வீழ்த்தும் என நம்புகிறோம். அப்படியில்லை என்றால், அவர்கள் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் தோல்வியடைவார்கள் என நம்புகிறோம். இரண்டாவது சொன்னது நடந்தால், எங்களின் அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் எழும்” என்று விளக்கினார். 

உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் 105 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து போட்டியில் சேசிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 13.4 ஓவர்களில் அடைந்தது. அந்த தோல்விதான் பாகிஸ்தானின் நெட் ரன் ரேட் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதையும் தடுக்கும் வகையில் அந்த ரன் ரேட் விகிதம்தாம் குறுக்கே நிற்கிறது. 

(AFP தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் தோல்வி வருத்தமளிக்கிறது: ஆர்த்தர்
  • பாகிஸ்தான், அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது
  • உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிவடைய உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!
"விராட் கோலி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார்" - ஹனுமா விஹாரி
"விராட் கோலி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார்" - ஹனுமா விஹாரி
"ஸ்ரேயால், பன்ட் ஒன்றாக வந்திருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும்" - கோலி
"ஸ்ரேயால், பன்ட் ஒன்றாக வந்திருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும்" - கோலி
பெங்களூரு போலிஸின் நகைச்சுவையான ட்விட்டுக்கு வந்த எதிர்மறை கருத்துக்கள்!
பெங்களூரு போலிஸின் நகைச்சுவையான ட்விட்டுக்கு வந்த எதிர்மறை கருத்துக்கள்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
"4வது இடத்தில் யார் ஆட வேண்டும்?" - அமிதாப் பச்சனைப் போல் கேட்ட கவாஸ்கர்!
Advertisement