தோனி ரன் அவுட் குறித்து ஐசிசி ட்விட்; கடும் கோபத்தில் இந்திய ரசிகர்கள்!

Updated: 11 July 2019 16:04 IST

ஐசிசி இந்த வசனத்தை டெர்மினேட்டர் தொடரில் இருந்து எடுத்து பதிவிட்டாலும், ரசிகர்கள் இதை எளிமையான கமெண்ட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

ICC
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த பிறகு தோனி ஆட்டமிழந்தார். © Twitter

உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியின் ரன் அவுட் ஆட்டத்தின் நிலையை முழுமையாக மாற்றி அமைத்தது. இலக்கை நோக்கி இந்தியா ஆடிக்கொண்டிந்த சமயத்தில், மார்டின் கப்தில் வீசிய பந்து நேரடியாக ஸ்டம்பில் பட்டது. இதனால், தோனி அவுட் ஆனார். இந்திய அணி தோல்வியுற்றதால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இந்த சமயத்தில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி ரன் அவுட் ஆன வீடியோ வெளியிட்டு, "Hasta La Vista, Dhoni" (போய் வாருங்கள், மீண்டும் சந்திப்போம்)என்று பதிவிட்டிருந்தது. இதனை கண்ட ரசிகர்கள் ஐசிசி அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஐசிசி இந்த வசனத்தை டெர்மினேட்டர் தொடரில் இருந்து எடுத்து பதிவிட்டாலும், ரசிகர்கள் இதை எளிமையான கமெண்ட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

அந்த ஓவரின் மூன்றாவது பந்து வீசப்பட்ட போது, தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார், இன்னொரு பக்கம் புவனேஷ்வர் குமார் இருந்தார்.மறுமுனையில் புவனேஷ்வர் குமார் இருந்ததால், தோனி ஸ்ட்ரைகிற்கு வர எண்ணி ரன் ஓடி அவுட் ஆனார். 

அந்த பந்தை மார்டின் கப்தில் நேரடியாக ஸ்டம்பிற்கு அடித்தார். இதனால், தோனி அவுட் ஆகி வெளியேறினார். 

அதற்கு முன்பாக தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இந்தியாவை வெற்றி பெற செய்யும் முனைப்பில் ஆடினர்.

இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்காக அமைக்கப்பட்டது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களை ஹென்றி மற்றும் போல்ட் வெளியேற்றினர். மிடில் ஆர்டர் வீரர்களை இடது கை வீரர் சாண்ட்னர் வெளியேற்றினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐசிசியின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
  • தோனி மற்றும் ஜடேஜா சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்
  • 239 என்ற நியூசிலாந்து இலக்கை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா
தொடர்புடைய கட்டுரைகள்
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
ராணுவ வீரர்களுடன் வாலிபால் ஆடிய தோனி! #ViralVideo
ராணுவ வீரர்களுடன் வாலிபால் ஆடிய தோனி! #ViralVideo
Advertisement