"ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு ஆயுதமாக விளங்குகிறார்" - கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்

Updated: 11 June 2019 15:52 IST

ஹர்திக் பாண்ட்யா மீது வைத்த நம்பிக்கைக்கு ஈடுசெய்யும் விதமாக அவர், 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 352 ரன்கள் எட்ட செய்தார்.

Hardik Pandya Is Key For India In World Cup 2019, Says Krishnamachari Srikkanth
ஹர்திக் பாண்ட்யாவின் சிறப்பான ஆட்டம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் மிகபெரிய ஸ்கோரை எட்ட உதவியது. © AFP

ஹர்திக் பாண்ட்யாவின் சிறப்பான ஆட்டம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் மிகபெரிய ஸ்கோரை எட்ட உதவியது. 2019 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணி ஒரு ஆயுதமாக செயல்படுவார் என கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கூறியுள்ளார். முன்னாள் தொடக்க வீரராகிய இவர், பாண்ட்யாவின் இன்னிங்ஸை " ஆட்டம் மாறிய தருணம்" என்று கூறியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா மீது வைத்த நம்பிக்கைக்கு ஈடுசெய்யும் விதமாக அவர், 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 352 ரன்கள் எட்ட செய்தார்.

"பாண்ட்யா இந்திய அணிக்கு ஒரு ஆயுதம், அது ஆஸ்திரேலியாவிடம் இல்லை. அவர் ஒரு ஆல் ரவுண்டர். இங்கிலாந்திடம் சில வீரர்கள் உள்ளனர். ஆனால், பாண்ட்யாவுக்கு இந்திய அணியில் சிறந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது" என்று ஶ்ரீகாந்த் கூறினார்.

"அவரின் சிறப்பான ஆட்டம் இந்தியாவை 312 பெறுவதிலிருந்து 352 பெற வைத்தது."

"பாண்ட்யாவுக்கு நான்காவது இடம் கொடுத்து அவருக்கு நம்பிக்கை வரவைத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி பாண்ட்யாவின் ஆட்டத்தால் நிலை தடுமாறி போயினர். பாண்ட்யா இந்திய அணியினருக்கு மிகபெரிய உற்சாகமாக திகழ்ந்து வருகிறார்" என்றார்.

இந்தப் போட்டியில் அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும், பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஆட்டத்தின் உச்சியில் உள்ளார், அங்கு இருப்பதைதான் அவர் விரும்புகிறார். இந்த தொடரில் அவர் இன்னும் பல விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்."

"இந்திய அணிக்கு இது சிறப்பான தொடக்கம் என்பதை யாரும் மறுக்க முடியது" என்றார்.

"பேட்ஸ்மென்கள் ரன்கள் குவிக்கிறார்கள், பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ரன் அவுட்டும் செய்யப்பட்டது. இந்திய அணியில் எல்லாமே சிறப்பாக தான் நடந்துகொண்டிருக்கிறது."

நோட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் பிரிஜ் மைதானத்தில் 2015 உலகக் கோப்பை ரன்னர்-அப் அணியான நியூசிலாந்தை சந்திக்கிறது இந்திய அணி. நியூசிலாந்து அணியை குறைந்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய அணிக்கு அறிவுறித்தியுள்ளார் ஶ்ரீகாந்த்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸிக்கு எதிரான போட்டியில் பாண்ட்யாவுக்கு 4வது இடம் கொடுக்கப்பட்டது
  • ஹர்திக் பாண்ட்யா 27 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்
  • ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவுடன் ஒரு அபிமான செல்ஃபியை பகிர்ந்த காதலி நடாசா!
ஹர்திக் பாண்ட்யாவுடன் ஒரு அபிமான செல்ஃபியை பகிர்ந்த காதலி நடாசா!
ஹர்திக் மற்றும் நடாசாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன க்ருணால் பாண்ட்யா!
ஹர்திக் மற்றும் நடாசாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன க்ருணால் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவின் நிச்சயதார்த்தத்துக்கு வாழ்த்து  தெரிவித்த விராட் கோலி!
ஹர்திக் பாண்ட்யாவின் நிச்சயதார்த்தத்துக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
Advertisement