"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி

Updated: 23 July 2019 20:53 IST

32 வயதான கப்தில் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் பின் தொடர் முழுவதுமே சரியாக ஆடவில்லை.

Martin Guptill Posts Pleasing Message For Wife, Daughter After "Best And Worst" World Cup Final
உலகக் கோப்பையில் 10 ஆட்டங்களில் ஆடிய அவர் வெறும் 186 ரன்களை மட்டுமே குவித்தார். © Instagram

உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கப்தில் எரிந்த பந்து பென் ஸ்டோக்ஸ் மீது பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றது. அது இங்கிலாந்தை உலகக் கோப்பையை வெல்ல காரணமாக்கியது.  இதனால் இறுதிப்போட்டி டை ஆகி, பின்னர் வந்த சூப்பர் ஓவரும் டை ஆகிய நிலையில் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் நியூசிலாந்து வீரர்கள் அனைவருமே மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டனர், கப்தில் தனது சமூக வலைதள பதில் எனக்கு இரண்டு ஆதரவாளவுகள் உள்ளனர். ஒன்று என் மனைவி , மற்றொருவர் என் மகள் என பதிவிட்டுள்ளார்.

"எனக்கு நல்ல நாள் மற்றும் மோசமான நாள் இரண்டிலும் ஆதரவு தரும் இருவர் என்னோடு வருவார்கள். எனது மகளையும், மனைவியையும் உலகில் வேறு எந்த விஷயத்தையும் விட அதிகம் விரும்புகிறேன்" என்று இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில் லாட்ஸில் நடந்தது மறக்க முடியாத ஃபைனல் என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் மற்றும் அணி வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்திருந்தார்.

"லார்ட்ஸில் நடந்த இறுதிப்போட்டி என் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான மற்றும் சிறந்த இரு தருணங்களையும் அளித்த நாளாக அமைந்தது. அனவரது ஆதரவுக்கும் நன்றி" என்று தெரிவித்திருந்தார்.

32 வயதான கப்தில் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் பின் தொடர் முழுவதுமே சரியாக ஆடவில்லை. 10 ஆட்டங்களில் ஆடிய அவர் வெறும் 186 ரன்களை மட்டுமே குவித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
'உலகக் கோப்பை ஃபைனல் ஓவர்த்ரோ சர்ச்சை': மீண்டும் ஆய்வு; என்ன நடக்கும்?
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
"எல்லாவற்றையும்விட மனைவியும் குழந்தையும்தான் முக்கியம்" : கப்தில் நெகிழ்ச்சி
இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!
இந்த உலகக் கோப்பையின் துரதிர்ஷ்டமான விக்கெட் இதுதான்!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
Advertisement