கைவிடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து போட்டி: மீம்ஸ்களால் நிறைந்த சமூக வலைத்தளம்!

Updated: 14 June 2019 15:02 IST

ஆட்டம் தடைப்பட்டதால், ரசிகர்கள் மிகவும் வெறுப்பாகினர். சமூக வலைத்தளங்களில் ட்விட்களும், மீம்ஸ்களும் பதிவிட்டனர்.

India vs New Zealand, Rain Delay: Funny Memes Flood Twitter As India vs New Zealand World Cup 2019 Clash Is Rained Off
ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கவிருந்த போட்டி மழையால் தடைப்பட்டது. © AFP

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி நேற்று மழையால் தடைப்பட்டது. தூரல் தொடங்கி கன மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மைதானம் முழுவதும் நனைந்து, ஆட்டம் கைவிடப்பட்டது. 16 வருடங்களுக்கு பிறகு இரு அணிகளும் மோதவிருந்தன. அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாக இது இருந்தது. ஆட்டம் தடைப்பட்டதால், ரசிகர்கள் மிகவும் வெறுப்பாகினர். சமூக வலைத்தளங்களில் ட்விட்களும், மீம்ஸ்களும் பதிவிட்டனர்.

இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் லோகோவை மாற்ற சொல்லி ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சில நேரலைகளின் தகவல்படி, மழை பெய்யத் தொடங்கியதும் ரசிகர்கள் பலர் மைதானத்தை விட்டும் வெளியேறியுள்ளனர்.

2019 உலகக் கோப்பையில் ஏற்கெனவே இரண்டு போட்டிகள் தடைப்பட்டது, இப்போது மூன்றாவது முறையாக இன்னொரு போட்டியும் கைவிடப்பட்டுள்ளது. மேக மூட்டத்துடன் இருந்தது தான் முதலில் இந்தியா நியூசிலாந்து போட்டி தாமதமாக காரணமாக இருந்தது. 

இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் ஒரு தோல்வியை கூட சந்திக்காத அணியாக உள்ளது. ஆனால், நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளை சந்தித்துள்ளதால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

2015ம் ஆண்டு உலகக் கோப்பையை சேப்பியனான நியூசிலாந்து அணி, இந்தத் தொடரில் ஶ்ரீலங்கா, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது. அதேபோல் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நடப்பு சேப்பியனான ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கவிருந்த போட்டி மழையால் தடைப்பட்டது
  • ஐசிசி லோகோவை மாற்ற சொல்லி ரசிகர்கள் மீம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்
  • இரு அணிகளும் ஒரு தோல்வியை கூட சந்திக்காத அணியாக உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!
“நான் தவறாக கூறவில்லை...” - மீண்டும் டெண்டுல்கரை கிண்டல் செய்த கங்குலி!
“நான் தவறாக கூறவில்லை...” - மீண்டும் டெண்டுல்கரை கிண்டல் செய்த கங்குலி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
“விட்டுவிலகுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல” - அனுஷ்கா ஷர்மா பகிர்ந்த செய்தி!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
IND vs NZ: மீம் மெட்டீரியலாக மாறிய கோலி பதிவிட்ட புகைப்படம்!
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
Advertisement