நிறைவுற்ற போட்டிகள்   
Match 41, ரிவர்சைட் மைதானம், செஸ்டர் –லி – ஸ்டிரிட், Jul 03, 2019
இங்கிலாந்து இங்கிலாந்து
305/8 (50.0/50)
நியூசிலாந்து நியூசிலாந்து
186 (45.0/50)
இங்கிலாந்து அணி, 119 ரன்னில் நியூசிலாந்து வை வென்றது

World Cup 2019 Live: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்!

Updated: 03 July 2019 14:55 IST

கடந்த இரு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள நியூசிலாந்து, இந்தப் போட்டியின் மூலம் கம்-பேக் கொடுக்க நினைக்கும்.

England vs New Zealand Live Score, ENG vs NZ Live Cricket Score, World Cup 2019: England Opt To Bat Against New Zealand
நியூசிலாந்து அணியில், கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரைத் தவிர வேறு யாரும் ரன்கள் குவிக்கவில்லை. © AFP

உலகக் கோப்பை 2019-ன், அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் தகுதி பெற்றுவிட்டன. கடைசி இரண்டு இடங்களுக்கான போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது. தற்போதைக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 3வது மற்றும் 4வது இடங்களில் இருக்கின்றன. இன்று இந்த இரண்டு அணிகளும் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியானது, அரையிறுதிக்குத் தகுதி பெறும் எனத் தெரிகிறது. 

இங்கிலாந்து, இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வருகிறது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தப் பார்ப்பார்கள். 

கடந்த இரு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள நியூசிலாந்து, இந்தப் போட்டியின் மூலம் கம்-பேக் கொடுக்க நினைக்கும். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ட்ரென்ட் போல்ட் மற்றும் ஃபெர்குசன் ஆகியோர் ஆக்ரோஷமாக பந்து வீசி வருகின்றனர். அதே நேரத்தில் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரைத் தவிர வேறு யாரும் ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

(LIVE SCORECARD)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
World Cup 2019 Live: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்!
World Cup 2019 Live: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்!
“அரையிறுதியில் நீயா, நானா..?”- மல்லுக்கட்ட உள்ள இங்கிலாந்து - நியூசிலாந்து #Preview
“அரையிறுதியில் நீயா, நானா..?”- மல்லுக்கட்ட உள்ள இங்கிலாந்து - நியூசிலாந்து #Preview
Advertisement