உலகக் கோப்பைக்கு இங்கிலாந்தின் ரெட்ரோ சீருடை!

Updated: 22 May 2019 22:36 IST

2019 உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து அணி உலகக் கோப்பைக்கான சீருடையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜெர்ஸி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

England Unveil 1992 Edition Inspired World Cup Kit, Fans Not Too Impressed
2019 உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து அணி உலகக் கோப்பைக்கான சீருடையை அறிமுகம் செய்துள்ளது. © Twitter

2019 உலகக் கோப்பையை நடத்தும் இங்கிலாந்து அணி உலகக் கோப்பைக்கான சீருடையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜெர்ஸி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சீருடை 1992 இங்கிலாந்து அணியின் சீருடையை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. அந்த உலகக் கோப்பை தொடரில் தான் இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. தங்கள் சீருடை எப்படி இருக்கிறது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்க இது இந்திய அணியை போல உள்ளது. ஒரே 'மென் இன் ப்ளூ' இந்தியாதான் என ட்விட்டரில் விமர்சிக்க துவங்கினர். 

எனினும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ப்ராட், "இது அழகான சீருடை" என்று வர்ணித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருந்தது. மே 30 உலகக் கோப்பை போட்டிகள் துவங்க உள்ள நிலையில் 3 மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்துள்ளது.  ஜோ டேன்லி மற்றுக் டேவிட் வில்லி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆர்ச்சருக்கு இடமில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. ஆர்ச்சர், லியம் டாவ்சன் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோரை தற்போது மாற்றியுள்ளது.

உலகின் நம்பர் 1 அணியாக இங்கிலாந்து விளங்குகிறது. 2015 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய பின்பு எழுச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த தொடரில் எங்களுக்கு தகுதியான இடத்தில் நாங்கள் உள்ளோம் சிறப்பாக ஆடி கோப்பையை வெல்வோம் என்று கேப்டன் மோர்கன் கூறியுள்ளார். 

2015 உலகக் கோப்பைக்கு பின்பு ஒருநாள் போட்டிகளின் அதிக ரன்களை இருமுறை குவித்து அசத்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக 444/3 என்ற ஸ்கோரையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 481/6 என்ற ஸ்கோரையும் எட்டி சாதனை படைத்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!
"6 பந்தில் 6 சிக்ஸ்": யுவராஜ் சிங்கின் டி20 சாதனை நிகழ்ந்த நாள் இன்று!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Advertisement