“அரையிறுதியில் நீயா, நானா..?”- மல்லுக்கட்ட உள்ள இங்கிலாந்து - நியூசிலாந்து #Preview

Updated: 03 July 2019 11:14 IST

நியூசிலாந்து, தான் கடைசியாக பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை எதிர்த்து விளையாடிய போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

England vs New Zealand: England And New Zealand Face-Off In Battle To Reach Last Four
இங்கிலாந்து, இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.  © AFP

உலகக் கோப்பை 2019-ன், அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் தகுதி பெற்றுவிட்டன. கடைசி இரண்டு இடங்களுக்கான போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது. தற்போதைக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 3வது மற்றும் 4வது இடங்களில் இருக்கின்றன. இன்று இந்த இரண்டு அணிகளும் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியானது, அரையிறுதிக்குத் தகுதி பெறும் எனத் தெரிகிறது. 

நியூசிலாந்து, தான் கடைசியாக பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை எதிர்த்து விளையாடிய போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து, இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

இன்றைய போட்டியில் எந்த அணி தோல்வியடைந்தாலும், அவர்கள் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று சொல்வதற்கில்லை. காரணம், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தைத் தவிர பாகிஸ்தானுக்கு மட்டும்தான் அரையிறுதிக்கு வர வாய்ப்புள்ளது. இங்கிலாந்து இன்றைய போட்டியில் தோற்று, பாகிஸ்தான் அடுத்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அணிகள் தரவரிசையில் மாற்றம் வரும். 

ஒருவேளை நியூசிலாந்து தோல்வியடைந்தாலும், அந்த அணிக்கு அதிக நெட் ரன்ரேட் இருப்பதால், பாகிஸ்தான் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு குறைவுதான். 

இங்கிலாந்து, இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வருகிறது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தப் பார்ப்பார்கள். 

கடந்த இரு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள நியூசிலாந்து, இந்தப் போட்டியின் மூலம் கம்-பேக் கொடுக்க நினைக்கும். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ட்ரென்ட் போல்ட் மற்றும் ஃபெர்குசன் ஆகியோர் ஆக்ரோஷமாக பந்து வீசி வருகின்றனர். அதே நேரத்தில் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரைத் தவிர வேறு யாரும் ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

Comments
ஹைலைட்ஸ்
  • இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது
  • நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்கள், ரன் எடுத்தக் திணறி வருகின்றனர்
  • நியூசி., வில்லியம்சன்தான் அந்த அணிக்காக தொடர்ந்து ரன் அடித்து வருகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
World Cup 2019 Live: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்!
World Cup 2019 Live: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்!
“அரையிறுதியில் நீயா, நானா..?”- மல்லுக்கட்ட உள்ள இங்கிலாந்து - நியூசிலாந்து #Preview
“அரையிறுதியில் நீயா, நானா..?”- மல்லுக்கட்ட உள்ள இங்கிலாந்து - நியூசிலாந்து #Preview
Advertisement