"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!

Updated: 15 July 2019 15:27 IST

நீசம், சூப்பர் ஓவரில் பேட் செய்தார். அப்போது ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Jimmy Neesham Advises Children, "Don
லார்ட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் சூப்பர் ஓவரில் நீசம் பேட் செய்தார். © AFP

நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நீசம், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற பிறகு மன வருத்தத்துடன் உள்ளார். போட்டியில் தோற்ற பிறகு நீசம் குழந்தைகளிடம் விளையாட்டை வேலையாக எடுத்துகொள்ள வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார். "குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள். சமையல் அல்லது வேறு எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். 60 வயதில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இறந்துபோங்கள்" என்று ஜிம்மி நீசம் ட்விட் செய்துள்ளார். 50 ஓவர் போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்கள் எடுத்தது. அதனால், சூப்பர் ஓவர் ஆடியது. அதிலும் போட்டி ட்ராவானதால், போட்டியின் போது அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி முதல் உலகக் கோப்பையை வென்றது.

நீசம், சூப்பர் ஓவரில் பேட் செய்தார். அப்போது ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு வாழ்த்துகள் சொன்ன நீசம், அடுத்த 10 வருடங்களுக்கு உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி அரைமணி நேரத்தை நினைவில் வைத்துக்கொள்ள கூடாது என்று ட்விட் செய்தார்.

அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "இன்று ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி. வழி முழுவதும் உங்களின் குரல்களை கேட்க முடிந்தது. மன்னித்து விடுங்கள் உங்களுக்கு தேவைப்பட்டதை கொடுக்க முடியாமல் போனது" என்றார்.

ஞாயிறன்று, போட்டி 50 ஓவர்கள் முடிந்து, சூப்பர் ஓவரிலும் ட்ராவானது. பின்னர், போட்டியில் அதிக பவுண்டரிகள் எடுத்த அணியாக இருந்த இங்கிலாந்து, முதல் உலகக் கோப்யையை வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு உயிரிழந்த ஜிம்மி நீசமின் பள்ளி பயிற்சியாளர்!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்" - குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் அறிவுரை!
"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!
"இறுதிப்போட்டி டிக்கெட்டுகளில் லாபம் பார்க்காதீர்கள்" - ஜேம்ஸ் நீஸம் வேண்டுகோள்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
Advertisement