''படித்த யாராவது இப்படி பேசுவார்களா'' கம்பீரை சாடும் அப்ரிதி!

Updated: 27 May 2019 11:25 IST

இந்தியா பாகிஸ்தான் அணியை மான்செஸ்டரில் ஜூன் 16ம் தேதி உலகக் கோப்பை தொடரில் சந்திக்கிறது. 

Shahid Afridi Lashes Out At Gautam Gambhir Over Suggestion That India Should Forfeit World Cup Match Against Pakistan
புல்வாமா தாக்குதலையும், உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டியையும் இணைத்து கம்பீர் தெரிவித்த கருத்து "முட்டாள் தனமானது" என்று கூறியுள்ளார் அப்ரிதி. © AFP

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லி எம்.பியுமான கவுதம் கம்பீர் மீது பாகிஸ்தான் வீரர் அப்ரிதி விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். புல்வாமா தாக்குதலையும், உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டியையும் இணைத்து கம்பீர் தெரிவித்த கருத்து "முட்டாள் தனமானது" என்று கூறியுள்ளார் அப்ரிதி. முன்னதாக கம்பீர் இந்தியா பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட்டே ஆடக்கூடாது என கூறியிருந்தார்.

இந்தியா பாகிஸ்தான் அணியை மான்செஸ்டரில் ஜூன் 16ம் தேதி உலகக் கோப்பை தொடரில் சந்திக்கிறது. 

கவுதம் கம்பீரின் இந்த பரிந்துரைக்கு அப்ரிதி கடும் விமர்சனங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ''கம்பீர் சொல்வது அர்த்தமற்றது. படித்த யாராவது இப்படி கூறுவார்களா" என்றார்.

அப்ரிதி சமீபத்தில் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் கம்பீரை அணுமுறையற்ற வீரர் என்று விமர்சித்திருந்தார். 

அதற்கு பதிலளித்த கம்பீரும் "இந்தியா மெடிக்கல் டூரிஸத்தை ஊக்குவிக்கிறது அப்ரிதியை நல்ல மனநல மருத்துவரிடம் காட்டுகிறேன். இந்தியா வர சொல்லுங்கள்" என்று கூறியிருந்தார்.

"சிலர் ஆட்டத்தில் தான் தவறான அணுகுமுறையை கையாளுவார்கள். ஆனால் கம்பீர் தனிப்பட்ட முறையிலும் அப்படித்தான்" என்று அப்ரிதி பதிலுக்கு விமர்சித்தார்.

"கராச்சியில் இவரை போன்றவர்களை 'சர்யல்' அதாவது எரிச்சல் தருபவர்கள் என்று அழைப்போம். அவர்கள் பாசிட்டிவாக இருக்கவே மாட்டார்கள்" என்றார்.

இந்த இருவரும் களத்து வெளியே மட்டுமல்ல களத்துக்குள்ளேயும் இப்படித்தான். கான்பூரில் 2007ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் சண்டையிட்ட இருவரும் ஐசிசி விதிகளின்படி எச்சரிக்கப்படது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் சமீபத்தில் அரசியலில் நுழைந்தார்
  • கம்பீரை அணுமுறையற்ற வீரர் என்று விமர்சித்திருந்தார் அப்ரிதி
  • இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டே ஆடக்கூடாது என கூறியிருந்தார் கம்பீர்
தொடர்புடைய கட்டுரைகள்
"பைத்தியமா?" - இரண்டாவது ரன் கேட்ட ரியாஸுக்கு நக்கலாக பதிலளித்த அஃப்ரிடி!
"பைத்தியமா?" - இரண்டாவது ரன் கேட்ட ரியாஸுக்கு நக்கலாக பதிலளித்த அஃப்ரிடி!
"அப்ரிடி அறைந்தார் ஆமிர் ஒப்புக்கொண்டார்" - சூதாட்டம் பற்றி அப்துல் ரஸாக்
"அப்ரிடி அறைந்தார் ஆமிர் ஒப்புக்கொண்டார்" - சூதாட்டம் பற்றி அப்துல் ரஸாக்
''படித்த யாராவது இப்படி பேசுவார்களா'' கம்பீரை சாடும் அப்ரிதி!
"மூத்த வீரர்கள் மட்டையால் தாக்கினார்கள்" - அப்ரிடிக்கு ஆதரவு தரும் அக்தர்
"மூத்த வீரர்கள் மட்டையால் தாக்கினார்கள்" - அப்ரிடிக்கு ஆதரவு தரும் அக்தர்
"சுயலாபத்துக்காக பலரது வாழ்க்கையை கெடுக்கிறார் அப்ரிடி": இம்ரான் ஃபர்ஹத்
"சுயலாபத்துக்காக பலரது வாழ்க்கையை கெடுக்கிறார் அப்ரிடி": இம்ரான் ஃபர்ஹத்
Advertisement