"ஓய்வை அறிவிக்காதீர்கள்" - தோனியிடம் ரசிகர்கள் வைக்கும் வேண்டுகோள்!

Updated: 11 July 2019 18:01 IST

உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, முன்னாள் கேப்டன் இதன் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்ற பேச்சுகள் பரவ தொடங்கின.

"Dhoni Don
தோனி ஓய்வு குறித்த யூகங்கள் வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் தோனிகாக ட்விட் செய்து வந்தனர். © AFP

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. 7வது இடத்தில் ஆட வந்த தோனி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஜடேஜாவுடன் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணி இலக்கை எட்ட போராடினார். தோனி ஆடிய கடைசி பந்தில் இரண்டாவது ரன் ஓடும் போது, கப்தில் வீசிய பந்து ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆனார். உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, முன்னாள் கேப்டன் இதன் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்ற பேச்சுகள் பரவ தொடங்கின. ஆனால், போட்டி முடிந்து பேசிய விராட் கோலி, தோனி அவரின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.

தோனி ஓய்வு குறித்த யூகங்கள் வைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் தோனிகாக ட்விட் செய்து வந்தனர். 

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்காக 3 மூன்று விக்கெட்டுகள் எடுத்து, 10 ஓவரில் 43 ரன்கள் விட்டுகொடுத்தார்.

இந்திய அணியின் டாப் ஆர்டர், ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 10வது ஓவர் முடிவில் தினேஷ் கார்த்திக் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

240 என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்தியா, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 49.3 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் வரும் விழானன்று நடைப்பெறவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்" - பிராவோ
"பதட்டமடையாமல் திறமைகளை நம்ப வேண்டும் என்று தோனி கற்றுகொடுத்தார்" - பிராவோ
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
Advertisement