சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!

Updated: 08 June 2019 11:39 IST

முத்திரையுடன் கூடிய கையுறையுடன் தோனி விளையாட பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

MS Dhoni Denied Permission By ICC To Wear Gloves With Insignia During World Cup
MS Dhoni: இந்திய துணை ராணுவப் படையில் கவுர லெஃப்டெனென்ட் பதவி வகித்து வருகிறார். © AFP

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ராணுவ முத்திரை கொண்ட கையுறையுடன் தோனி விளையாட அனுமதிக்க முடியாது என பிசிசிஐக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டவட்டமாக கூறியுள்ளது.

உலகக் கோப்பையில் இந்திய கிரிகெட் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்த்துத் தனது முதல் போட்டியை விளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் மாஸ் பெர்ஃபார்மன்ஸ் மட்டும் பேசு பொருளாக மாறவில்லை. விக்கெட் கீப்பர் தோனியின் கீப்பிங் கிளவுஸும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தென்னாப்பிரிக்கப் போட்டியில் தோனி அணிந்திருந்த கீப்பிங் கிளவுஸில் ராணுவத்தின் முத்திரைப் போன்ற ஒன்று இருந்தது. இதைப் பல கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு, ட்விட்டரில் விவாதிக்கத் தொடங்கினர். பலரும் தோனியின் இந்த செயலுக்குப் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, தோனியின் கிளவுஸில் இருக்கும் அந்த முத்திரை நீக்கப்பட வேண்டும் என்றும் கூறியுது.

இந்த விவகாரம் சர்ச்சையனாதைத் தொடர்ந்து பிசிசிஐ, தோனி தொடர்ந்து பச்சை நிற முத்திரையுடன் கூடிய கையுறையுடன் விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்தது.

இதனிடையே, இந்த விவகாரம் சர்ச்சையனாதைத் தொடர்ந்து பிசிசிஐ அமைப்பின் வினோத் ராய், “தோனி, கிளவுஸில் வைத்திருக்கும் முத்திரை ராணுவத்தினுடையது அல்ல. மேலும், அந்த முத்திரையை பயன்படுத்த அவர் சார்பில் பிசிசிஐ முறைப்படி ஐசிசி-யிடம் அனுமதி கேட்டுள்ளோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் மேலும், “கிரிக்கெட் வீரர்கள் வியாபாரம் சார்ந்து, மதம் சார்ந்து அல்லது ராணுவம் சார்ந்து எந்தவித லோகோவையும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரை அப்படி எதையும் சேர்ந்ததில்லை. ஆகையால் தோனி எந்தவித விதிமுறையையும் இங்கு மீறவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், பிசிசிஐ விளக்கத்தை ஏற்காத ஐசிசி, இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஐசிசி போட்டிகளின் விதிமுறைகளில், ஆடைகளிலும், பொருட்களிலும் எந்த ஒரு தனிப்பட்ட செய்தியையோ, சின்னத்தையோ வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. விக்கெட் கீப்பர் கையுறையில் தோனி கொண்டுள்ள சின்னம் இந்த ஒழுங்குமுறைகளை மீறுகிறது என ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரையை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதேபோல், தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோனி அணிந்திருந்த முத்திரையுடன் கூடிய கையுறைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

தோனி, இந்திய துணை ராணுவப் படையில் கவுர லெஃப்டெனென்ட் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

(With AFP Inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • ராணுவ முத்திரை கொண்ட கையுறையுடன் தோனி காணப்பட்டார்.
  • முத்திரையை அகற்ற பிசிசிஐக்கு ஐசிசி வலியுறுத்தல்.
  • தனிப்பட்ட செய்திகளை குறிக்கும் சின்னத்துடன் விளையாட அனுமதியில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
"நீங்கள் வெட்கப்படுகிறீர்களா?" - தோனியை பின்தொடர்ந்து கொஞ்சிய சாக்‌ஷி!
"நீங்கள் வெட்கப்படுகிறீர்களா?" - தோனியை பின்தொடர்ந்து கொஞ்சிய சாக்‌ஷி!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது" - சோயிப் அக்தர்
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு
எம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு 'ஸ்னீக் பீக்' வீடியோவை பகிர்ந்த சாக்ஷி!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
MS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது!!
Advertisement