இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!

Updated: 13 June 2019 16:44 IST

பாகிஸ்தான் ஊடகத்தில் வெளியான விளம்பரத்துக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

Sania Mirza Slams TV Ads Ahead Of India-Pakistan World Cup Clash
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். © Twitter

உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டி வரும் ஞாயிறன்று மான்செஸ்டரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகத்தில் வெளியான விளம்பரத்துக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். "இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு ஏற்கெனவே நல்ல வரவேற்பு இருக்கிறது. இது போன்ற முட்டாள்தனமான விளம்பரங்கள் மூலம் கவனம் ஈர்க்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.

அவர் குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில் இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமானை போன்ற தோற்ற அமைப்பு கொண்ட நபர் தோன்றி பாகிஸ்தான் வீரரிடத்தில் பேசுவது போலவும், அவரை கிண்டல் செய்வது போலவும் காட்சியாக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பால்கோட் தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட அபிநந்தன், பாகிஸ்தான் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அப்போது நடந்த உரையாடலை கிண்டல் செய்து அந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் உத்தி பாகிஸ்தான் மேட்ச் என கேட்க அதற்கு அபிநந்தன் உருவ கொண்டவர் ''மன்னியுங்கள், அதுபற்றி நான் கூறமாட்டேன்'' எனக்கூறி கிண்டல் செய்திருப்பார்.

இதேபோல இன்னொரு விள்மபரத்தில் இந்தியா பாகிஸ்தானின் இந்த தந்தையர் தினத்தன்று விளையாடுவதால் பாகிஸ்தான் தோற்கும் என்ற அடிப்படையில் வெளியான விளம்பரம் சர்ச்சையாகியுள்ளது.

இந்த போட்டிக்கு முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 6 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. அதில் 6 முறையும் இந்தியாவே வென்றுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம் - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்!!
'நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம்' - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்!!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
“சச்சினா, ரோகித்தா..?”- ஐசிசி ட்வீட்டுக்கு டெண்டுல்கரின் பதிலடி!
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
"பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது இந்தியா" - வக்கார் யூனிஸ்
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
பாகிஸ்தான் ஜர்னலிஸ்ட்டை கலாய்த்த ரோஹித் ஷர்மா
Advertisement