உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது #LiveScore

Updated: 28 May 2019 15:28 IST

ICC World Cup Live Score, IND vs BAN, Cricket Live Score: இந்தியா, கடைசி பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷை சந்திக்கிறது.

World Cup 2019, IND vs BAN Warm Up Match Live Score: Bangladesh Elect To Bowl Against India
இந்திய அணி பங்களாதேஷுடனான பயிற்சி ஆட்டத்தில் தனது பேட்டிங்கை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. © AFP

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பங்களாதேஷுடனான பயிற்சி ஆட்டத்தில் தனது பேட்டிங்கை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் போட்டி கார்டிஃப்பில் இருக்கும் சோஃபியா கார்டன்ஸில் நடைப்பெறுகிறது. நியூசிலாந்துடனான பயிற்சி போட்டியில் இந்தியா 179 ரன்களுக்கு சுருண்டது. ரவீந்திர ஜடேஜா அபாரமாக ஆடி அரைசதமடித்தார். பங்களாதேஷுக்கு பாகிஸ்தானுடனான பயிற்சி ஆட்டம் மழையால் தடைபட்டது. ஜடேஜா தவிர ஹர்திக் பாண்ட்யா மட்டும் 30 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொர்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். (LIVE SCORECARD)

World Cup 2019 Warm-Up Match Live Score Updates Between India vs Bangladesh, straight from Sophia Gardens, Cardiff

துவக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ஷிகர் தவான் இருவரும் ஒற்றை இலக்கத்திலும், தோனி மற்றும் கோலி முறையே 17 மற்றும் 18 ரன்கள் குவித்தனர்,

கே.எல்.ராகுல் நான்காம் நிலை வீரராக களமிறங்கி 10 பந்துகளில் 6 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் பும்ரா தன்னை நிரூபித்துள்ளார். 4 ஓவரில் 2 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்,

ஷமி மற்றும் ஜடேஜா அபாரமாக பந்துவீச பாண்ட்யாவும், சஹாலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர், 

அணி விவரம்:

இந்தியா: கோலி, தோனி, ரோஹித், ஜடேஜா, த்வான், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, சஹால், குல்தீப் யாதவ், ராகுல், பும்ரா, பாண்ட்யா, ஜாதவ், விஜய் சங்கர்.

பங்களாதேஷ்: மொர்தசா, ரஹீம், ஷகிப் அல் ஹாசன், தமீம் இக்பால் , மஹமத்துல்லா, ரபெல் ஹுசைன், மிதுன், சபீர், செளமியா சர்கார், ஜெயத், லிட்டன் தாஸ், மொஸாடெக் ஹூசைன், முஸ்தஃபுசுர் ரஹீம், மெஹந்தி ஹூசைன், முகமது சைஃபுதின்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட தர்மசாலா சென்றது இந்திய அணி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட தர்மசாலா சென்றது இந்திய அணி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!
Advertisement