ரசிகையை காயப்படுத்திய சிக்ஸர்! நேரில் அழைத்து தொப்பியை பரிசாக அளித்த ரோஹித் சர்மா!!

Updated: 03 July 2019 17:45 IST

வங்க தேசத்திற்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஓபனிங் பேட்ஸ்மேன் சதம் அடித்து வெற்றிக்கு அடிகோலினார்.

Rohit Sharma
காயம் அடைந்த ரசிகைக்கு ஆட்டோ கிராஃப் போட்ட தொப்பியை பரிசாக அளிக்கிறார் ரோஹித் சர்மா. © Twitter

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வங்க தேசத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர் ரசிகை ஒருவருக்கு காயத்தை ஏற்படுத்தியது. அவரை நேரில் அழைத்து நலம் விசாரித்த ரோஹித் சர்மா, அவருக்கு தனது தொப்பியை ஆட்டோகிராஃப் போட்டு பரிசாக வழங்கினார். 

ரோஹித் சர்மாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வங்க தேசத்திற்கு எதிராக பர்மிங்ஹாமில் இந்திய அணி முக்கிய போட்டியை எதிர்கொண்டது. இதில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். 
 


அவரது 104 ரன்கள் உதவியால் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது. அவர் அடித்த சிக்ஸர் ஒன்று மீனா என்ற பெண்ணின் முகத்தில் விழுந்து பலத்த காயத்தை ஏற்படுத்தியது.
 


இதை ரோஹித் சர்மா கவனித்துக் கொண்டார். ஆட்டம் முடிந்த பின்னர் ரசிகை மீனாவை நேரில் அழைத்து அவரிடம் ரோஹித் நலம் விசாரித்தார். இதையடுத்து தனது தொப்பியில் ஆட்டோகிராஃப் போட்டு அதனை ரசிகை மீனாவுக்கு ரோஹித் பரிசாக வழங்கினார். 

ரோஹித்தின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்புகள் குவிகின்றன. இந்த போட்டோவை கிரிக்கெட் ரசிகர்கள் ஷேர் செய்து நெகிழத் தொடங்கியுள்ளனர். 

(With AFP inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • வங்க தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சதம் அடித்தார்
  • உலகக்கோப்பை தொடரில் 4 சதங்களை அடித்துள்ளார் ரோஹித்
  • அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்த தவானின் வீடியோவை வெளியிட்ட ரோஹித் ஷர்மா!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
"ரோஹித், ஜடேஜா இருவரும் பொறுப்பான, அன்பான அப்பாக்கள்" - ஷிகர் தவான்!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
டெஸ்ட் தொடரில் இணைந்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்த அஸ்வின்!
"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!
"ரோஹித் ஷர்மா உலகத் தரம் வாய்ந்த வீரர்" - புகழும் ஆடம் கில்கிறிஸ்ட்!
Advertisement