'நல்லா விளையாடுங்க... நாங்க இருக்கிறோம்' - பாக். கேப்டனை தேற்றிய கிரிக்கெட் வாரிய தலைவர்!!

Updated: 19 June 2019 16:33 IST

5 ஆட்டங்களில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஒரேயொரு மேட்சில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Pakistan Cricket Board Chief Phones Sarfaraz Ahmed After Loss To India
10 நாடுகள் கொண்ட பாயின்ட்ஸ் டேபிளில் பாகிஸ்தான் 9-வது இடத்தில் இருக்கிறது. © AFP

''விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சிறப்பாக விளையாடுங்கள். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்'' என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு வாரிய தலைவர் மானி ஆறுதல் தெரிவித்தள்ளார். 

உலகக்கோப்பை தொடரில் மட்டமான திறமையை வெளிப்படுத்திய அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கிறது. இதுவரை 5 போட்டிகளில் ஆடிய அந்த அணி மொத்தமே ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

பாயின்ட்ஸ் டேபிளை பொறுத்தளவில் பாகிஸ்தான் மொத்தம் உள்ள 10 நாடுகளில் 9-வது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் படுமோசமாக விளையாடினர். மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைக்கு ஆட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 

இதன்பின்னர் வீரர்களை எச்சரித்த கேப்டன் சர்ப்ராஸ் அகமது, மோசமாகி விளையாடி நாட்டுக்கு திரும்பினால் மக்கள் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று எச்சரிக்கை செய்திருந்தார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஹ்சான் மானி கேப்டன் சர்ப்ராஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரிடம், விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஆதரவாக நாடு இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் இணைய தளம் ஒன்று தெரிவித்துள்ளது. 

புள்ளிப் பட்டியிலில் கடைசியில் இருந்து 2-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இனி எப்படிப்பார்த்தாலும் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பில்லை. 

Comments
ஹைலைட்ஸ்
  • 5 போட்டிகளில் 4-ல் தோல்வியடைந்துள்ளது பாகிஸ்தான்
  • உலகக்கோப்பையில் ஒருமுறைகூட இந்தியாவை பாக். வென்றதில்லை
  • சர்ப்ராசுக்கு வாரிய தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
''அடுத்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெஸ்ட் அணியாக இருக்கும்'' : இம்ரான் கான்
தோனி, டி காக், சர்ப்ராஸ், ஹோப்- இது கீப்பர்களின்
தோனி, டி காக், சர்ப்ராஸ், ஹோப்- இது கீப்பர்களின் 'வாவ் கேட்ச்' கலெக்சன்!
“அற்புதங்களுக்கு வாய்ப்பிருக்கு..!”- அரையிறுதிக் கனவை கைவிடாத பாக். கேப்டன்
“அற்புதங்களுக்கு வாய்ப்பிருக்கு..!”- அரையிறுதிக் கனவை கைவிடாத பாக். கேப்டன்
“மன்னித்துவிடுங்கள் சர்ஃபரஸ்…”- பாக். ரசிகர்களின் உருக்கமான மெசேஜ்!
“மன்னித்துவிடுங்கள் சர்ஃபரஸ்…”- பாக். ரசிகர்களின் உருக்கமான மெசேஜ்!
“ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க..?”- பாக். கேப்டனை கேலி செய்த நபர்; வெடித்த சர்ச்சை! #Video
“ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க..?”- பாக். கேப்டனை கேலி செய்த நபர்; வெடித்த சர்ச்சை! #Video
Advertisement