ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்! உலக சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன்!!

Updated: 18 June 2019 21:04 IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் யான் மோர்கன்

Eoin Morgan Breaks World Record With Six-Hitting Spree In Manchester
ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் மோர்கன் 144 ரன்களை குவித்தார். © AFP

ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் யான் மோர்கன் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இதில் கேப்டன் மோர்கன் மட்டுமே 144 ரன்களை எடுத்தார். ஃபாஸ்ட், ஸ்பின் என அனைத்து வித பவுலர்களின் பந்து வீச்சை பதம் பார்த்த மோர்கன், ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸ், ஃபோரை விளாசித் தள்ளினார். 

இந்த இன்னிங்சுக்கு முன்பாக ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் என்ற பெயரை ரோகித் சர்மா, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் மட்டுமே தக்க வைத்திருந்தனர். அவர்கள் ஒரு இன்னிங்சில் 16 சிக்ஸர்களை அடித்திருந்தனர். 

அந்த சாதனையை மோர்கன் முறியடித்துள்ளார். ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் மோர்கன் 17 சிக்ஸர்களை பறக்க விட்டிருக்கிறார். 

மோர்கன் சாதனையின் உதவியால் அதிக சிக்ஸர்களை ஒருநாள் போட்டியில் அடித்த அணி என்ற பெயரையும் இங்கிலாந்து பெற்றுள்ளது. இந்த போட்டியில் மட்டும் 24 சிக்ஸர்களை அடித்துள்ளது இங்கிலாந்து. 

Comments
ஹைலைட்ஸ்
  • Eoin Morgan scored 144 in just 71 balls
  • Morgan hit 17 sixes in his innings, the most by any player in ODIs
  • England have set Afghanistan a target of 398 in 50 overs
தொடர்புடைய கட்டுரைகள்
"மோர்கன் ஒரு லெஜெண்ட்" நெகிழ வைக்கும் ரஷித் கான் ட்விட்!
"மோர்கன் ஒரு லெஜெண்ட்" நெகிழ வைக்கும் ரஷித் கான் ட்விட்!
"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!
"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
கிரிக்கெட், டென்னிஸ் இறுதிப் போட்டி: பதட்டத்தை குறைக்க ஐசிசி மற்றும் விம்பிள்டன் செய்த ட்விட்டுகள்!
கிரிக்கெட், டென்னிஸ் இறுதிப் போட்டி: பதட்டத்தை குறைக்க ஐசிசி மற்றும் விம்பிள்டன் செய்த ட்விட்டுகள்!
இங்கிலாந்து - நியூசிலாந்து : 2019 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?
இங்கிலாந்து - நியூசிலாந்து : 2019 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?
Advertisement