“உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததால்…”- மனம் திறந்த ரிஷப் பன்ட்!

Updated: 22 June 2019 11:57 IST

பன்ட், அடுத்து நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் 11 பேரில் இடம் பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Rishabh Pant Says He "Became More Focused" After Not Being Selected For World Cup
ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கருக்கு, பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் ஆப்கானிஸ்தான் போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். © AFP

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ள 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் ரிஷப் பன்ட். ஷிகர் தவான் காயமடைந்ததைத் தொடர்ந்து பன்ட், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணி, தேர்வு செய்யப்பட்டபோது பன்ட், அணியில் இடம் பெறவில்லை. அது பெரும் விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் அவர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

“உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத போது, நான் எதையோ ஒன்றை சரியாக செய்யவில்லை என்று நினைத்தேன். அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு எனது ஆட்டத்தில் கவனம் செலுத்தினேன். அதைத் தொடர்ந்துதான் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினேன். நான் தொடர்ந்து பயிற்சி செய்தேன்.

எல்லோருக்கும் ஒரே கனவுதான். இந்தியாவை உலகக் கோப்பையில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே அது. அப்படிப்பட்ட சூழலில் தவானுக்கு பதில் அழைக்கப்பட்ட போது, நான் என் தாயுடன் இருந்தேன். அவரிடம்தான் இது குறித்து முதலில் தெரிவித்தேன். அவர் நேராக கோயிலுக்குத்தான் சென்றார்.

ஒரு கிரிக்கெட் வீரராக, உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பது எனது நெடு நாள் கனவாகும். இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் பன்ட். 

தவானுக்கு பதில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார். இப்படிப்பட்ட சூழலில் பன்ட், அடுத்து நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் 11 பேரில் இடம் பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கருக்கு, பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் ஆப்கானிஸ்தான் போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். இதனால் அணியில் உள்ள தினேஷ் கார்த்திக் மற்றும் பன்ட் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • அணியில் சேர்க்கப்படாததை நேர்மறையாக அணுகினேன்: பன்ட்
  • தவானுக்கு பதில் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
  • இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் இணைந்தார் பன்ட்... இந்திய அணியில் கே.எஸ்.பரத்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டை விட சிறப்பாக விளையாடுகிறீர்கள்" - இடது கை பேட்டிங் செய்த அஸ்வின்!
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
"பன்ட்டுக்கு, ஸ்டம்புக்கு பின்னால் தெளிவும் நேர்த்தியும் தேவை" குமார் சங்கக்காரா
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
Advertisement