ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ

Updated: 15 July 2019 13:31 IST

ஐஏஎன்எஸில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு சிறந்த அணி ஒரு போட்டி முடிவுக்கு வந்தவுடன் அடுத்த போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கும்" என்றார்.

BCCI To Check On Virat Kohli-Rohit Sharma Rift, Split Captaincy An Option
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை விராட் கோலி வழிநடத்தினார். © AFP

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெளியேறிய பிறகு, எங்கெல்லாம் இந்தியா சொத்தியது, எதனால் அணி தோல்வியுற்றது போன்ற கேள்விகள், விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் விராட் கோலி இருக்குள்ளும் கருத்து வேறுபாடு எற்பட்டுள்ளது.ரோஹித் ஷர்மா அதிக ரன்கள் எடுத்துள்ளார். இது உலகக் கோப்பையின் மதிப்பெண் அட்டவணையில் இருந்து சிறப்பிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியாக இருந்தாலும், பி.சி.சி.ஐ விவாதிக்க ஆர்வமாக உள்ள மற்றொரு காரணம் கேப்டன் பதவியில் பிரித்துகொள்ளும் யோசனையாகும்.

ஐஏஎன்எஸில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு சிறந்த அணி ஒரு போட்டி முடிவுக்கு வந்தவுடன் அடுத்த போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கும். முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் இதை தான் செய்யும். அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இப்போது இந்தியா உள்ளது. இந்திய அணி சிறு போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மாவையும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியையும் கேப்டனாக நியமிக்க பரிசீலனை செய்யலாம்.

"ரோஹித் ஷர்மா 50 ஓவர் போட்டிகளை வழிநடத்த இதுவே சரியான நேரமாக இருக்கும். இப்போது கேப்டனாக உள்ள கோலிக்கு பெரும் ஆதரவு  உள்ளது. அதோடு அடுத்த உலகக் கோப்பைக்கு அவரை தயார்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஏற்கெனவே உள்ள திட்டங்கள் மற்றும் யோசனைகளுக்கு புது வடிவம் கொடுக்க வேண்டியுள்ளது. நாம் எல்லாருக்கும் தெரிந்ததே, ஏற்கெனவே இருக்கும் இடங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இந்தப் போட்டிகளுக்கு ரோஹித் சரியாக இருப்பார்" என்றார் அந்த அதிகாரி.

விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் இடையில் பிரச்னை போன்றவை வதந்திகள் மட்டுமே என்று விளக்கிய அதிகாரி, இதுபோன்ற தவறான விஷயங்கள் பரவுவது அணிக்கு சீரழிவு என்று கூறினார். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இந்திய அணி அடுத்த பணிகளுக்கு செல்லும் வேலையை தொடங்கியுள்ளது. இந்திய அணி, நாட்டுக்கு திரும்பியது தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, தேர்வுக் குழு அதிகாரி எம் எஸ் கே பிரசாத் ஆகியோர் நிர்வாகக் குழுவை சந்திக்கவுள்ளனர்.

"ஏற்கெனவே வினோத் ராய் (CoA chief) இந்திய கிரிக்கெட் அணியினருடன் சந்திப்பு இருக்கும் என்று கூறியிருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த மறுஆய்வு கூட்டத்தில் இந்த பிரச்னைகளுக்கான தீர்வை கண்டறிய வேண்டும். மேலும், வதந்திகளுக்கு முடிவாகவும் இது அமைய வேண்டும்" என்றார்.

அணியில் கவனிக்கப்படவேண்டிய இடங்களை உடனடியாக கவனித்து, அதை சரி செய்ய வேண்டும் என்று வினோத் ராய் முன்பே கூறியிருந்தார். 

கடந்த முறையும் அணியினருடன் வினோத் மீட்டிங் நடத்தினார். அதில், சீனியர் வீரர்களும், பியிற்சியாளர்களும் கலந்து கொண்டனர். உலகக் கோப்பை போட்டிகளுக்காக ஐபிஎல்லில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், அதில் ரோஹித் ஷர்மா மற்றும் கோலிக்கு மாற்று கருத்துக்கள் இருந்தது தெரியவந்தது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதியில் வெளியேறியது
  • இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
  • நிர்வாகக் குழு, இந்திய அணியுடன் மறுஆய்வு சந்திப்பு நடத்தவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
“சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றங்களை இந்திய அணி செய்யவில்லை” - க்ரேக் மெக்மில்லன்
“அணி தேர்வு அர்த்தமற்றது” - நியூசிலாந்துடனான தோல்விக்கு பின் கபில் தேவ்!
“அணி தேர்வு அர்த்தமற்றது” - நியூசிலாந்துடனான தோல்விக்கு பின் கபில் தேவ்!
டெண்டுல்கர் பெயரை தவறாக உச்சரித்த டிரம்பை கலாய்த்த கெவின் பீட்டர்சன்!
டெண்டுல்கர் பெயரை தவறாக உச்சரித்த டிரம்பை கலாய்த்த கெவின் பீட்டர்சன்!
“சூ-சின் டெண்டுல்கர்” என்று உச்சரித்த அதிபர் டிரம்ப்பை ட்ரோல் செய்த ஐசிசி!
“சூ-சின் டெண்டுல்கர்” என்று உச்சரித்த அதிபர் டிரம்ப்பை ட்ரோல் செய்த ஐசிசி!
Advertisement