உலகக் கோப்பை இந்திய அணியின் பயிற்சிக்கு நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள்!

Updated: 16 April 2019 13:10 IST

இந்திய உலகக் கோப்பை அணிக்கு பயிற்சி முகாமில் இளம்வீரர்கள் நவ்தீப் சைனி, அவேஷ் கான், கலீல் கமது மற்றும் தீபக் சஹார் ஆகியோரை பிசிசிஐ நியமித்துள்ளது.

BCCI Names Four Fast Bowlers To Assist Team India For World Cup Preparation
ஜூன் 9ல் ஆஸ்திரேலியாவையும், ஜூன் 13 நியூசிலாந்தையும், ஜூன் 16 பாகிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. © AFP

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி அணியை அறிவித்தது. இந்திய அணியின் உலகக் கோப்பை பயிற்சி முகாமில் பந்துவீச நான்கு இளம் வேகப்பந்து வீச்சாளர்களை நியமித்துள்ளது. இந்திய உலகக் கோப்பை அணிக்கு பயிற்சி முகாமில் இளம்வீரர்கள் நவ்தீப் சைனி, அவேஷ் கான், கலீல் அகமது மற்றும் தீபக் சஹார் ஆகியோரை பிசிசிஐ நியமித்துள்ளது.  ஐபிஎல் தொடரிலும் இந்த வீரர்கள் அசத்தி வருகிறார்கள்.

இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு தேர்வான அணிகளிலிருந்தே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மாற்று கீப்பராக பன்ட்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கின் பெயர் இடம் பெற்றது. இதற்கு தேர்வுக்குழு பதிலளித்துள்ளது.

"தினேஷ் கார்த்திக் 91 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர். ஆனால் ரிஷப் பன்ட்டோ வெறும் 5 போட்டிகள் அனுபவம் கொண்டவர். அவரை தோனிக்கு மாற்று வீரராக களமிறக்க முடியாமல் போக இதுவே காரணம்" என்றனர்.

இந்த மாற்று கீப்பர்கள் ஒருவேளை தோனி காயமடைந்தால் மட்டுமே களமிறக்கப்படுவார்கள். தோனிதான் உலகக் கோப்பையின் பிரதான கீப்பர்கள் என்றனர்.

இந்தியா தடுமாறும் நான்காம் நிலை வீரருக்கு தகுதியான வீரராக இருப்பார் விஜய் சங்கர் என்று கூறப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் கலக்கும் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியா உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் ஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா ஏப்ரல் 18 அன்று அணி விவரத்தை வெளியிடுவதாக கூறியுள்ளது.

ஜூன் 9ல் ஆஸ்திரேலியாவையும், ஜூன் 13 நியூசிலாந்தையும், ஜூன் 16 பாகிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை இந்திய அணியின் பயிற்சிக்கு நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள்!
உலகக் கோப்பை இந்திய அணியின் பயிற்சிக்கு நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள்!
ஆஸ்திரேலிய தொடருக்கு நாளை அணி தேர்வு - உலகக் கோப்பைக்கு முன்னோட்டமா?
ஆஸ்திரேலிய தொடருக்கு நாளை அணி தேர்வு - உலகக் கோப்பைக்கு முன்னோட்டமா?
ஆஸ்திரேலிய தொடரை வரவேற்கும் சாஹால் - குல்தீப் செல்ஃபி!
ஆஸ்திரேலிய தொடரை வரவேற்கும் சாஹால் - குல்தீப் செல்ஃபி!
"இரண்டாவது டி20 போட்டியில் வென்றதற்கு இதுதான் உத்தி" - கலீல் அகமது
"இரண்டாவது டி20 போட்டியில் வென்றதற்கு இதுதான் உத்தி" - கலீல் அகமது
இவரைப்போல யாருமில்லை - தோனி-கலீல் அகமதின் ப்ரோமேன்ஸ்!
இவரைப்போல யாருமில்லை - தோனி-கலீல் அகமதின் ப்ரோமேன்ஸ்!
Advertisement