இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு - ரவி சாஸ்திரி உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு சலுகை!

Updated: 16 July 2019 22:29 IST

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரிக்கும், மற்ற பயிற்சியாளர் குழுவுக்கும் 45 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது பிசிசிஐ.

BCCI Invites Applications For India Coach, Support Staff, "Automatic Entry" For Ravi Shastri In Recruitment Process
இந்தியா மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளில் பயணம் செய்து ஆடவுள்ளது. © AFP

இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரிக்கும், மற்ற பயிற்சியாளர் குழுவுக்கும் 45 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது பிசிசிஐ.  இந்திய அணிக்கு புதிதாக தலைமைப்பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், மற்றும் பிசியோதெரஃபிஸ்ட், நிர்வாகிகளை புதிதாக நியமிக்க வேண்டும் என்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இதில் இப்போது உள்ளவர்களுக்கு நேரடி நுழைவு அனுமதி என்ற சலுகையையும் வழங்கியுள்ளது. 

முடிவுகளில் பிசிசிஐ எடுக்கும் முடிவே இறுதியானது என்று உச்சநீதி மன்றம் அமைத்த நிர்வாகக்குழு மூலம் நியமிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

விண்னப்பிக்க கடைசி நாள் ஜூலை 30, 2019, மாலை 5 மணி என்று கூறப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கும் மேற்கிந்திய தீவுகள் தொடர் வரை இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர் ஆகியோரது பயிற்சிக் காலம் 45 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இவர்கள் நால்வருக்கும் அடுத்த பயிற்சியாளர் தேர்வில் நேரடி அனுமதி வழங்கப்ப்ட்டுள்ளது. 

இந்தியா மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளில் பயணம் செய்து ஆடவுள்ளது.

செப்டம்பர் 15ம் இந்தியாவில் தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் இந்தியா ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இரண்டு சிறந்தவர்கள்" - பிசிசிஐ புகைப்படத்துக்கு கிடைத்த எதிர்மறை கருத்துகள்
"இரண்டு சிறந்தவர்கள்" - பிசிசிஐ புகைப்படத்துக்கு கிடைத்த எதிர்மறை கருத்துகள்
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
கோலி - ரோஹித் சர்மா குறித்த வதந்திகள் "முழுமையான முட்டாள்தனம்"  - ரவி சாஸ்திரி!
கோலி - ரோஹித் சர்மா குறித்த வதந்திகள் "முழுமையான முட்டாள்தனம்" - ரவி சாஸ்திரி!
ரவி சாஸ்திரி பதிவிட்ட புகைப்படம்... மீம்ஸ்களால் நிறைந்த ட்விட்டர்!
ரவி சாஸ்திரி பதிவிட்ட புகைப்படம்... மீம்ஸ்களால் நிறைந்த ட்விட்டர்!
"லெஜண்டுடன் ஒருநாள்" பாப் மார்லியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரவி சாஸ்திரி!
"லெஜண்டுடன் ஒருநாள்" பாப் மார்லியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரவி சாஸ்திரி!
Advertisement