“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்

Updated: 21 June 2019 12:11 IST

“ஒவ்வொரு முறையும் ஒரு பார்ட்னர்ஷிப் உருவாகும்போதும் பதற்றமடைந்தோம்."

Australia vs Bangladesh: Bangladesh Chase Gave Us Butterflies, Accepts Australia Captain Aaron Finch
"எங்களிடம் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்" © AFP

உலகக் கோப்பைத் தொடரில் நேற்று வங்க தேசம் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இருந்தாலும், வங்கதேசம் கடைசிவரை விடாமல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், ஓப்பனாக பேசியுள்ளார். 

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பின்ச் மற்றும் வார்னர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை ஆடினர். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பின்ச் அரைசதம் அடிக்க, வார்னர் சதம் கடந்தார். அடுத்த வந்த கவாஜாவும், அரைசதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. 

இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை சேஸ் செய்த வங்கதேசம், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒப்பனர்களில் ஒருவரான தமீம் இக்பால், அரைசதம் கடந்தார். கீப்பர் முஷ்ஃபிக்கீர் ரஹீம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் கடந்து களத்தில் இருந்தார். மஹமுதுல்லாவும் அதிரடி அரைசதம் அடித்தார். ஆனால் வங்கதேசத்தின் இந்த அனைத்து முயற்சிகளும் வீணாக போனது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. 

இந்த அதிரடி சேஸிங் குறித்து பேசிய பின்ச், “ஒவ்வொரு முறையும் ஒரு பார்ட்னர்ஷிப் உருவாகும்போதும் பதற்றமடைந்தோம்.

எங்களிடம் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். இதற்கு முன்னரும் உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும் வங்கதேசத்தின் சேஸில் கிலி ஏற்படுத்தியது” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 


(IANS தகவல்களுடன்)

Comments
ஹைலைட்ஸ்
  • இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வங்கதேசம் வெற்றிபெற்றாக வேண்டும்
  • 10 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் ஆஸி., இருக்கிறது
  • இந்தப் போட்டியில் வார்னர், சதம் அடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: நியூசிலாந்து - ஆஸி பலப்பரீட்சை! #Preview
உலகக் கோப்பை 2019: நியூசிலாந்து - ஆஸி பலப்பரீட்சை! #Preview
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்
“வங்க தேசத்தின் சேஸிங் அள்ளு கிளப்புச்சுங்க…”- ஆஸி., கேப்டன் ஓப்பன் டாக்
"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி
"பால் ஸ்டெம்பில் பட்டும் அவுட் இல்லை என்பது ஆர்ச்சர்யமளிக்கிறது" - கோலி
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
Advertisement