"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்

Updated: 08 July 2019 13:36 IST

ஆஸ்திரேலியா மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் லீக் போட்டிகளில் வீழ்த்தியது.

Australia
இரு அணிகளுக்குமிடையேயான அரையிறுதி போட்டி பெறும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  © AFP

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டிக்கு முன்பாக இது இங்கிலாந்து தோற்கும் உலகக் கோப்பையாக அமையவுள்ளது என்று கூறியுள்ளார். லீக் போட்டிகளில் கடைசி போட்டியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பின்பு இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை ஜூலை 11ம் தேதி சந்திக்கிறது. "இந்த போட்டியின்  முடிவு ஆஷஸ் தொடருக்கு முன்னோட்டமாக இருக்கும். ஜூலை 14ம் தேதி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் ஆடும்" என்றார். 

ஆஸ்திரேலியா மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் லீக் போட்டிகளில் வீழ்த்தியது. 

ஆனால் லயனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.தைதே போல 2017-18 ஆஷஸ் தொடருக்கு முன்பாக பல இங்கிலாந்து வீரர்களின் டெஸ்ட் வாழ்க்கை இதோடு முடியும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அது தொடருக்கான எதிர்பார்ப்பை கூட்டியது. 

“இங்கிலாந்து அணியில், பல உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 அணியாக இங்கிலாந்துதான் உள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். அதை வைத்துப் பார்த்தால், எங்கள் மீது எந்தவித அழுத்தமும் இல்லை. அவர்கள் தோல்வியடைந்தால் இழக்க நிறைய இருக்கிறது. எங்களுக்கோ இந்தப் போட்டியிலிருந்து பெறுவதற்குத்தான் அதிகம் உள்ளது” என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் 26 விக்கெட்டுகளை இந்த உலகக் கோப்பை தொடரில் குவித்து ஒரே உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய மெக்ராத்தின் சாதனையை சமன் செய்துள்ளார். 

சிறு காயம் இங்கிலாந்து போட்டிக்கு முன்னாதாக ஸ்டார்க்கிற்கு ஏற்பட்டாலும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு தயார் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளது.

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். அது அணிக்கு பலம் சேர்க்கிறது. இங்கிலாந்து அணியின் துவக்க விக்கெட்டுகளை வீழ்த்துவதே குறி என்று ஸ்டார்க் கூறியுள்ளார். 

மோர்கனை குறி வைத்து ஷார்ட் பந்துகளை வீசும் உத்தி பலனளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுவே அவரது பலவீனம் என்றும் கூறினார்.

மோர்கன் ஸ்டார்க்கை சந்திக்க பயப்படுகிறார் என்று கெவின் பீட்டர்சன் விமர்சனம் செய்தார். இதுகுறித்து பதிலளித்த ஸ்டார்க் ''இந்த கேள்விக்கான வொடையை நீங்கள் மோர்கனிடம் தான் கேட்க வேண்டும்'' என்றார்.

இரு அணிகளுக்குமிடையேயான அரையிறுதி போட்டி பெறும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard
ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அரையிறுதிப் போட்டி: மழை குறுக்கீடு இருக்குமா..?

Advertisement