இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அரையிறுதிப் போட்டி: மழை குறுக்கீடு இருக்குமா..?

Updated: 10 July 2019 17:48 IST

போட்டி முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

World Cup Semi Final Australia vs England, Birmingham Weather Forecast
உலகக் கோப்பைத் தொடர் முழுவதும், மழையின் தாக்கமானது இருந்து கொண்டே இருந்தது © Twitter

உலகக் கோப்பை 2019 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நாளை நடக்க உள்ளது. பிர்மிங்ஹாமில் நடக்க உள்ள இந்தப் போட்டியிலும் மழை குறுக்கீடு இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தொடரின் ஆரம்பத்தில் எதிரணிகளை பந்தாடிய இங்கிலாந்து, ஒரு கட்டத்தில் தொடரந்து போட்டிகளில் தோற்றது. ஆனால் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக கிடைத்த வெற்றியால், மீண்டும் ஃபார்முக்கு வந்தது இங்கிலாந்து. ஆஸ்திரேலியா, இந்த முறையும் உலகக் கோப்பையை ஜெயிக்கப் பார்க்கிறது. இருவருக்குமான இடையில் நடக்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

உலகக் கோப்பைத் தொடர் முழுவதும், மழையின் தாக்கமானது இருந்து கொண்டே இருந்தது. லீக் சுற்றிலேயே அதிக தாக்கம் ஏற்படுத்திய மழை, முதல் அரையிறுதிப் போட்டியிலும் குறுக்கிட்டது. இதைத் தொடர்ந்து நேற்றே முடிய வேண்டிய முதல் அரையிறுதி, இன்றும் தொடர்கிறது. 

இந்நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அரையிறுதியில், போட்டித் தொடங்கும் போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 3 மணி நேரத்துக்கு மேக மூட்டும் மேலும் அதிகரிக்கும். 46 சதவிகதம் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று அக்கூவெதர் (Accuweather) கூறியுள்ளது. 

போட்டி முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
விதிகளை மீறிய ஜேசன் ராய்... அபராதம் விதித்த ஐசிசி!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
அவுட் என அறிவித்த அம்பயருடன் விவாதித்த இங்கிலாந்து தொடக்க வீரர்!
ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard
ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!! #Scorecard
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அரையிறுதிப் போட்டி: மழை குறுக்கீடு இருக்குமா..?
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அரையிறுதிப் போட்டி: மழை குறுக்கீடு இருக்குமா..?
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
"எங்களுக்கு இல்லை... இங்கிலாந்துக்குதான் அழுத்தம்" - லயனின் அரையிறுதி ஆருடம்
Advertisement